Thursday, March 24, 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11

கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம்.

ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன.
காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய பகைமையுணர்ச்சிகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. புதிய உறவுகள் பூத்தன. நட்பு என்னும் நறுமணப் பூ நாடுகளெங்கும் மணக்கத் தொடங்கியது.

ஆனால் சிலுவைப் போர்கள் ஆயுதங்களால் செய்வது மட்டும்தான் ஒழிந்தது. அறிவால் செய்யப்படும் போர் தொடர்கின்றது.

இஸ்லாமைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்கின்றது. அந்த விஷம் கிறிஸ்தவ தலைமைப் பீடங்களால் இன்னும் ஐரோப்பிய மக்களுக்குப் புகட்டப்படுகிறது. அது ஐரோப்பியர்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.

ஆக, பகைமையின் விதை எப்பொழுதோ தூவப்பட்டு விட்டது. அதன் பலன்களைத்தான் முஸ்லிம் உலகம் அன்றிலிருந்து இன்று வரை அனுபவித்து வருகின்றது. அதனால்தான் கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். முஸ்லிம் ஸ்பெயின் என்பது அழிக்கப்பட்டது. அங்கே ஆட்சி புரிந்து வந்த கிரனடா பேரரசு 1492ம் ஆண்டு கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்டது.

மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் உள்ள உறவு அடுத்ததாகப் பாதிக்கப்பட்டது துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபோது நடந்தது.

இப்படி மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் நடந்த போர்கள் கலாச்சார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் நிரந்தரமான பகையை நிலைநிறுத்தியது. ஆனால் இந்தச் சண்டைகளில் லாபம் அடைந்தது ஐரோப்பாதான். அது எப்படி என்று பார்ப்போம்.

இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்து, குறிப்பாக அரேபியர்களிடமிருந்து ‘காப்பி’ அடித்துத்தான் ஐரோப்பாவின் கலைகளும், விஞ்ஞானமும் வளர்ந்தன. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என்பது முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் பெற்றதுதான்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களிடையே பல பிரிவுகள் தோன்றின. அவர்களுக்குள் அடித்துக்கொண்டனர். ஆனால் இஸ்லாம் மீது அவர்கள் கொண்ட பகை மட்டும் அப்படியே நிலைத்து நின்றது.

இப்பொழுது ஒரு சந்தேகம் ஏற்படலாம். எப்பொழுதோ மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விஷமப் பிரச்சாரம், எப்பொழுதோ நடந்த சிலுவைப் போர்கள், எப்பொழுதோ விதைக்கப்பட்ட பகையுணர்ச்சி இன்னுமா அங்கே நிலவுகிறது? இப்பொழுது அங்கே மத உணர்வு எல்லாம் மங்கிப் போய்க் கிடக்கின்றது. இந்தச் சூழ்நிலையிலும் அங்கே அதே பகைமையுணர்ச்சி இருக்கும் என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்?

இப்படி சில கேள்விகள் நம் மனங்களில் எழலாம்.

இவை நியாயமான சந்தேகங்களே. ஆனால் நவீன மனோதத்துவவியலாளர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு அவனது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் மத நம்பிக்கைகளை அவன் முழுவதுமாக இழந்து விடலாம். ஆனால் அந்த மதத்துடன் சம்பந்தப்பட்ட சில மூடநம்பிக்கைகள் அவனது உள்ளத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்.

அதன் ஆழ, அகலம் வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் ஒரு மேலைநாட்டவனை எடுத்துக்கொண்டால் அவனிடம் இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையே மேலோங்கி நிற்கும்.

மேற்குலகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள், இன்னபிற ஊடக வெளியீடுகளில் அவர்கள் இஸ்லாத்தை போர் வெறி பிடித்த மார்க்கமாகவும், முஸ்லிம்களை இரத்த வெறி பிடித்த காட்டேறிகளாகவுமே சித்தரிக்கின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

இஸ்லாமை பல்வேறு வகைகளாக அவர்கள் கூறு போடுகின்றனர். ‘வன்முறை இஸ்லாம்’, ‘அரசியல் இஸ்லாம்’, ‘தீவிரவாத இஸ்லாம்’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் இஸ்லாமை வகை பிரிக்கின்றனர்.

இன்று அதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஜிஹாதி இஸ்லாம்’ என்று ஒரு புதிய இஸ்லாமைச் சொல்கின்றனர்.

அவர்களிடமுள்ள சக்திவாய்ந்த மீடியாவைப் பயன்படுத்தி இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்றும் பெரும்பாலான மக்களை நம்ப வைத்துள்ளனர்.

இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் இவர்களது பொய்ப் பிரச்சாரத்தில் முஸ்லிம்களும் வீழ்ந்ததுதாம்.
ஆம்! இன்று முஸ்லிம்களும் இஸ்லாத்தில் வன்முறை உள்ளது என்று கருதுகிறார்கள். பேசுகிறார்கள். அதற்கேற்றாற்போல் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் மேற்குலகுக்குக் கிடைத்துள்ளனர். அவர்களை வைத்து இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் அவர்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்கின்றனர்.

ஆக, மொத்த மீடியாவில் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான். இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நன்றாகப் புரியும்.

சிலுவைகள் பற்றியும், அவை ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிய விரும்புவோர் முஹம்மத் அஸத் (Muhammad Asad) எழுதிய Islam at the Cross Roads என்ற நூலைப் படிக்கவும்.

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13-ஐ நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதனை பார்க்கும் பொழுது அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவர்களாக அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன.

இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக எட்டு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரசியலில் நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் முன்னேற ஆவண செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும், மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறது.

இதே போன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது.

இனிமேல் அவ்வாறு பேசிக் கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.

முஸ்லீம் லீக் – பல வருடங்களாக அரசியலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திற்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான்.

சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலை கும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது என்று சொல்லும் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில்(வேறு கட்சியின்) நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு. இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது.

ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திற்காக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுலையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக-விற்கு துணை புரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது.

இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது. அதாவது திமுக வை தோற்கடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக.

எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொருந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும்.

இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையாளுவோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டணி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்க்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகமாக இருக்குமோ என்றும் கூறத் தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது. அந்த அதிகாரம் பெற என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்களை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை. ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான் இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.

SDPI -இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே.

தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட வேண்டும் அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.

இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வட்டாரங்களிலும் சரி புதுவிதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவண செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது.

அத்தோடு தங்களது ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.

அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக பலமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.

கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின் அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர், பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்), பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), திருப்பூர் தெற்கு, நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும் சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.

இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….

இளைய சமூகத்தின் எழுச்சி

துனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும்.

அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

ஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.

கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.

துனீஷியாவின் பின் அலியும், எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கும் மரணத்திற்கு போராடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடக்குமுறைக்கும், அகங்காரத்திற்கும் பெயர் பெற்ற லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியும் இதர அரபுலக ஆட்சியாளர்களும் மக்கள் எழுச்சியை இரத்தக் களரியால் இனி எவ்வளவு காலம் அடக்கி ஒடுக்கிவிட முடியும்? என்னவாயினும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அரசு கருவூலத்தையும் நாட்டையும் குடும்ப சொத்தாக்கிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இனியும் அதிக நாட்கள் பதவியில் தொடரமுடியாது என்பது உறுதியாகும்.

இவர்களை வைத்து சித்து விளையாட்டுக்களை ஆடிய அமெரிக்கா உள்ளிட்ட மேலாதிக்க சக்திகளும், சியோனிஸ்டுகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மனித குல வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அபூர்வமான இந்த புரட்சியின் முழு சொந்தக்காரர்களும் இளைஞர்கள்தாம் என்பது உலகம் அறிந்துக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அடக்குமுறையை தாண்டி புரட்சிக்கு அழைப்பு விடுத்த இளைஞர்கள், எத்தகைய அரசியல் நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும் தங்களது மன உறுதியின் மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

பாரம்பரிய அச்சு ஊடகங்களும், சேனல்களும் சுய ஆதாயங்களுக்காக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் அராஜகங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பவும், சுதந்திரத்திற்காக போராடவும் வேறு வழிகளை தேர்ந்தெடுக்க அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்தது.

ஜனநாயகத்தின் உயிரற்ற சடலங்களாக மாறிவிட்ட நாடுகளில் வாக்குச்சீட்டிற்கு கிழிந்த காகிதத்தின் மதிப்புக்கூட இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அழுகிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து அவர்களது அழுகையை அடக்குவதுபோல பந்தையும், கோர்ட்டையும், க்ளப்பையும், பணத்தையும் அளித்து கால்பந்து ஜுரத்தை வளர்த்து இளைய தலைமுறையினரின் ஆவேச உணர்வுகளை வீரியமற்றதாக மாற்றிவிடலாம் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் தந்திரமாகும்.

சிந்தனையை முடக்கி ஒழுக்கச் சீரழிவுகளையும், பாலியல் வக்கிரங்களையும் உருவாக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், மதுபானம், சூதாட்டம் ஆகியவற்றின் வாசல்களை திறந்துவிட்டு எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் மார்க்க அறிஞர்களை கைப்பாவையாக்கிய ஆட்சியாளர்களுக்கு இறைவனைப் பற்றிய பயம் என்பது அறவே இல்லாமல் போனது.

என்றைக்காவது ஒருநாள் இளைய சமூகம் மாத்தி யோசிக்கவேக் கூடாது என்ற பிடிவாதத்தில் இத்தகைய அநாகரீகங்களை புரிந்து வந்தார்கள் அவர்கள்.

ஆனால், எல்லா கனவுகளும், திட்டங்களையும் தகர்த்து எறிந்த அரபுலக இளைஞர்கள் தங்கள் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஏகாத்தியபாதிகளுக்கெதிராக வீதிகளில் அணி திரண்டுள்ளனர்.

இளைய சமூகத்தின் எதிர்பாராத எழுச்சிப் பேரலையின் முன்னால் இறைவனின் மற்றும் மக்களின் எதிரிகளான சர்வாதிகாரிகள் மண்டியிடுவதோடு முகங்குப்புற நிலம் கவ்வுவதை உலகம் கண்டுகொண்டுதானிருக்கிறது.

நிச்சயமாக இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் நமது நாடும் ஒன்று. இங்கே மாற்றத்தின் வாசல்கள் திறந்து கிடப்பதால் மக்கள் எழுச்சிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என சிலர் ஆறுதலடையலாம். ஆனால், நமது ஜனநாயகம் பணத்திமிரும் மதவெறியும் பிடித்த குற்றவாளிகளின் கரங்களில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஊழல் மற்றும் மோசடியின் கொடூரமான கரம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஆறுதலடைவதற்கு என்னக் காரணம் இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

கிரிக்கெட்டின் ஜுரத்திலும், சினிமாவின் மோகத்திலும் இளைஞர்களை மூழ்கடித்துவிட்டு தாங்கள் சுகபோகமாக ஆட்சிச் செய்யலாம் என இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் கனவுகளை கண்டுக் கொண்டிருக்கின்றன. கோடிகளை கொள்ளையடித்துவிட்டு சில இலவசங்களை அளித்து நாட்டு மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்ற சிந்தனை அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ளது.

மதவெறியையும், ஜாதீய வெறியையும் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் தேசபக்த வேடம்போடும் சில போலிகள்.

இந்தியாவில் மிகப்பெரிய நிர்ணாயக சக்தி இளைஞர்களாவர். அவர்களை அரசியலிருந்து ஒதுக்கி நிறுத்திவிட்டு உணர்வற்ற சடலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கருதுவது மூடத்தனமாகும்.

பண்டாரங்களும், பரதேசிகளும், கூத்தாடிகளுமெல்லாம் தலைவராக தலை நிமிர்த்தி நடந்துகொண்டு ‘எனக்கு பின்னால் லட்சக்கணக்கானோர் அணி திரண்டுள்ளனர்’ என வீம்பு பேசுவது இனி அதிக நாள் நீடிக்காது. வயோதிகர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளில் இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுவது வெகு நாட்கள் தொடராது. புரட்சி என்பது பேலட் பேப்பரிலோ அல்லது புல்லட்டிலோ அல்ல. இளைஞர்களின் எழுச்சியின் மூலமாகத்தான் என்ற புதிய பாடத்தை அனைவரும் படித்தேயாக வேண்டும். இளைய தலைமுறை தம்மை சுற்றியிருக்கும் மாயையைகளை விலக்கி விட்டு எழுச்சிப்பெற்றால் டெல்லி ஜந்தர்மந்தர் தஹ்ரீர் சதுக்கமாக மாற வெகு காலம் வேண்டிவராது.

உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்..

உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்.....

இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்.... ஓருஜ‌னாஸா,

நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து.

அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..

நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.

இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்....

அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு.

அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் முக‌த்தை மூடியிருக்கும் அத‌ன் திறையை மெதுவாக‌ அக‌ற்றுகின்றீர்க‌ள்.

?????????????????????????

???????????????????????

Image removed by sender.

இப்போது

இப்போது

நீங்க‌ள் பார்த்த‌து யாரையோ அல்ல உங்க‌ள் சொந்த‌ முக‌த்தைதான்!!!!!!!!!!

நீங்க‌ள்தான் அங்கே மையித்தாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ளீர்க‌ள்.

ஆசைப்ப‌ட்டு உங்க‌ளை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த‌ உங்க‌ள் வாழ்க்கை முடிந்துவிட்ட‌து.

மாடிக்க‌ட்ட‌ட‌ங்க‌ள் க‌ட்டுவ‌த‌ற்காக‌ ஹ‌ஜ் போகாது சேர்த்த‌ உங்க‌ள் ப‌ண‌ம் பிர‌யோச‌ன‌ம‌ற்ற‌தாகிவிட்ட‌து.

தொழும் நேர‌ங்க‌ளை ம‌ற‌ந்த்து நீங்க‌ள் க‌ல‌ந்துகொண்ட கூட்ட‌ங்க‌ள் வீணாகிவிட்ட‌து..

உங்க‌ள் ஆட‌ம்ப‌ர‌வாக‌ன‌ங்க‌ள்,

குழ‌ந்தைச் செல்வ‌ங்க‌ள்,

அன்பும‌னைவி..........எல்லாமே முடிந்துவிட்ட‌து.

இப்போது உங்க‌ளுக்காக எஞ்சி இருப்ப‌து நீங்க‌ள் உடுத்தி இருக்கும் உங்க‌ள் க‌ப‌ன் பிட‌வைம‌ட்டுமே!!

உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர்க‌ள் உங்க‌ளை சும‌ந்து உங்க‌ள் நிர‌ந்த‌தர வீட்டில் வைத்துவிட்டார்க‌ள்.

ஒரு பிடி ம‌ண் உங்க‌ள் மேல் விழுகிற‌து.

உல‌க‌மே இடிந்து விழுந்துவிட்ட‌து போல் உண‌ர்கிறீர்க‌ள்.

கொஞ்ச‌மாக‌த் தெரிந்து கொண்டிருந்த‌ வெளிச்ச‌ம் இப்போது அடியோடு இல்லாம‌ல் போய்விட்ட‌து.

இந்த‌நிமிட‌ம் .... காரிருளில் நீங்க‌ள் ம‌ட்டுமாக‌

த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்..

எல்லோரும் ந‌ட‌ந்துசொல்லும் நில‌ம‌ட்ட‌த்திற்கு கீழால் ஆர‌டி நில‌த்தில் நீங்க‌ள் ம‌ட்டும் ..

நீங்க‌ள் ம‌ட்டும் த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.. !!

காசோ ப‌ண‌மோ,

குழ‌ந்தைக‌ளோ, ம‌னைவியோ இல்லாதத‌னிமை ..

குற‌ந்த‌ப‌ட்ச‌ம் ஓர்கைய‌ட‌க்க‌த் தொலைபேசியாவ‌து, இல்லாதத‌னிமை..

இர‌ண்டு ம‌ல‌க்குமார் உங்க‌ளை நோக்கிவ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள்..

இப்போது நீங்க‌ள் என்ன‌ப‌தில் கூற‌த்தயாராகி இருக்கின்றீர்க‌ள்..

அந்த‌ நிமிட‌த்தை கொஞ்ச‌ம் க‌ற்ப‌னையில் கொண்டுவந்து, (இந்த‌க்கேள்விக‌ளை கொஞ்ச‌ம் கேட்டுப்பாருங்க‌ள்..)

நான் உண்மையான‌ ஒருமுஃமீனா??

குரானின் ஒளியில் வாழ்கிறேனா?? தொழுகையை விடாது தொழுகிறேனா??

வ‌ருட‌ம் ஒரு முறை வ‌ரும் ர‌ம‌லானில் அல்லாஹ்வுக்காக‌ நோன்பு நோற்கின்றேனா??

க‌ட‌மையான ஹ‌ஜ்ஜை உரிய‌முறையில் நிறைவேற்றுகின்றேனா?

போன்ற இன்னோர‌ன்ன‌ கேள்விக‌ளுக்கு ஆம் என்ற‌ விடையை தைரிய‌மாக‌ கூற‌ப்போகின்றீர்க‌ளா?

இல்லை....

கால‌த்தை வீணாக‌க் க‌ட‌த்திவிட்டேனே..

ஒரு முறையாவாது அல்ல‌ஹ்வின் திருப்பொருத்த‌த்திற்காக‌ ஹ‌ஜ் செய்திருக்க‌லாமே,

500/= நோட்டுக்க‌ளை விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கொடுத்த‌த‌ற்குப்ப‌திலாக, யாருக்கும் தெரியாம‌ல் ந‌ன்மைக‌ளை கொள்ளை அடித்திருக்க‌ளாமே..

என்நோயை சாட்டுவைத்து நோன்புக‌ளை விட்டுவிட்டேனே, கொஞ்ச‌ம் ம‌ன‌ச்சாட்சிக்கு பொருத்த‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்க‌ளாமே..

வ‌ட்டி எடுக்காம‌ல் லாபமோ ந‌ட்ட‌மோ வியாபார‌த்தையே முழும‌ன‌தாக‌ செய்திருக்க‌ளாமே..

குரான் கூறிய‌ ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே

அன்னிய‌ ஆட‌வ‌ர்க‌ளின் முன்னால் என் அழ‌ங்கார‌த்தை ம‌றைத்து க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டும் காட்டி இருக்க‌லாமே..

குழ‌ந்தைக‌ளை சிற‌ந்த‌முறையில் வ‌ள‌ர்த்திருக்க‌லாமே..

தொலைக்காட்சியின் முன்ம‌ண்டியிட்ட‌த‌ற்குப்ப‌திலாக‌ சுஜூதில் இறைவ‌னை நெருங்கி இருக்க‌லாமே..

தொலைபேசியில் அர‌ட்டை அடித்த‌த‌ற்குப்ப‌திலாக‌ குரானுட‌ன் உரையாடி இருக்க‌ளாமே, இல்லைஏதாவ‌துப‌ய‌னுள்ளபுத்த்க‌த்தைவாசித்துஇருக்க‌ளாமே..

என கைசேத‌ப்ப‌ட‌ப் போகின்றீர்க‌ளா??????

சிந்தியுங்க‌ள்!!

உல‌க‌ வாழ்க்கை என்ப‌து ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இட‌ம‌ல்ல‌.. காத்திருந்தாலும் இழ‌ந்தால் மீண்டும் கிடைப்ப‌தில்லை. இம்மை என்ப‌து ஒரு ப‌ய‌ண‌ம் தாம‌திக்காம‌ல் எம்மை ம‌றுமையின் வாச‌லில்கொண்டு சேர்த்திடும்.. அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் க‌ண் மூடித்த‌ன‌மாய் கால‌த்தை க‌ழிக்காம‌ல் திட்ட‌மிட்டு எம்மை நாம் வ‌ள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்.

இல்லையேல்.. எம்வாழ்வும்இவ்விறைவாக்குக‌ளின்பிர‌திப‌ளிப்பாகிவிடும்.

நஊதுபில்லாஹிமின்ஹா...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾ ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾ உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.

وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿11﴾

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.

க‌டைசித் தருண‌த்தில் இறைவ‌னிட‌ம் கெஞ்சும் துர‌திஷ்டவாளிக‌ளாய் நாம் இருக்காது, எம்மை இறைவ‌னின் பாதையில் திசை திருப்பிக் கொள்ள‌வேண்டும்.

ஏனெனில் இறைவ‌ன் த‌ன் அருள்ம‌றையில்

لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (சூரார‌ஃத் 11)என‌க்கூறுகிறான்.

சிலுவைக் கொள்கை வாழ்த்துகிறதா ? வஞ்சிக்கிறதா ?

இயேசு என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ராயீல் சமூகத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராக இருந்தார். அவரது தூதுத்துவத்தை ஏற்க மறுத்த யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்கு முடிவு செய்தனர். "மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்" என்கிறது பழய ஏற்பாடு. (உபாகமம் 21:23) இந்த தத்துவத்தின் அடிப்படையில் அவரை உலக மக்களுக்கு முன் சபிக்கப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் வல்லமை மிக்க அல்லாஹ் அவனது பேராற்றலால் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து தனது நேசத்திற்குரிய தூதரைக் காப்பாற்றினான்! இதோ அல்லாஹ் கூறுகிறான்:

"(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான். ஈஸாவே நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும, என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், நிராகரிப்பவர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை, நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னப் உங்களுடைய மீளுதல் என்னிடமேயாகும். அப்போது நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன் என அல்லாஹ் கூறியதை (எண்ணிப் பாருங்கள்) (அல்குர்ஆன் 3: 54,55)

ஈஸா (அலை) அவர்களைக் கொல்வதற்கோ, சிலுவையில் அறைவதற்கோ யூதர்களால் இயலவில்லை! இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கான தெளிவான சான்று எதுவம் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை! அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர்! இதுவே மேற்கண்ட வசனம் சொல்லும் சுருக்கமான செய்தி!

யூதர்க்ள இயேசுவை ஒரு விபச்சார சந்ததி என்று தூற்றினர். அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்றும் கூறினர். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம் என்றும் பெருமை பேசினர். தாங்கள் வீரம் மிக்க பாரம்பர்யத்தை உடையவர்கள் என்பதற்கு இதுஒர் அடையாளம் என்று பெருமை பேசினர்!

இதில் வியப்பு என்னவெனில் யூதர்களின் இந்த நம்பிக்கைக்கையையும் அவர்களின் இறுமாப்பையும் சரிகாணும் வகையிலேயே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கிறது!

இயேசுவை யூதர்கள் கடுமையாகத் துன்புறுத்தி , முட்கிரீடத்தை அவர் தலையில் வைத்து மரச்சிலுவையில் அறைந்தும் ஈட்டியால் குத்தியும் கொலை செய்தார்கள் என்பதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆதம் (விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம்) செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இதை இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.

ஆதிபாவமும் சிலுவை சித்தாந்தமும்!

மனிதர்கள் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாகப் பிறக்கின்றார்கள் என்றும், பாவத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே கடவுள் இயேசுவாக அவதாரம் எடுத்து சிலுவையில் மரித்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்! இதைத்தான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாக பவுல் அறிமுகம் செய்துள்ளார்! பவுலின் கூற்றுக்களைப் பார்ப்போம்:

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (1 கொரிந்தியர் 15:14)

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்" (1 கொரிந்தியர் 15:17)

இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது! அறையப்பட்டது இயேசுவே என்று கிறிஸ்தவம் நம்புகிறது! இவ்வாறு முற்றிலும் முரண்பட்ட இரண்டு நம்பிக்கைகளுக்கிடையில் எது உண்மை? என்பதை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

ஆதிபாவமும் பைபிளும்!

ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்! இதனால் அவர் பாவியானார்! இந்த பாவம் தலைமுறை தலைமுறையாக மனிதனை வந்தடைகிறது. இதன் காரணமாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்தில் பிறக்கிறது. இந்த பாவம் இயேசுவின் சிலுவை மரணத்தால் நீக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

பைபிளில் இயேசுவின் உபதேசங்களுக்கு கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் எனில்... இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அவரது உபதேசங்களாகக் காணப்படும் பைபிளில் உள்ள ஏதேனும் வசனங்களில் இதை வலியுறுத்தி உபதேசித்திருக்கிறாரா? என்பதை சிந்திக்க வேண்டும். பைபிளில் எங்குமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு சொன்னதாகக் காண முடியவில்லை. இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த எத்தனையோ தீர்க்கதரிசிகள், அவர்களின் உபதேசங்கள் ஏராளமாக பைபிளில் காணப்படுகின்றன. அவர்கள் எவருமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தவில்லை.

மாறாக, பைபிளில் இது யாருடைய உபதேசமாகக் காணப்படுகிறது? இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தி இடையூறு செய்து வந்த சவுல் என்ற பவுல்! திடீரென ஒரு நாள் இயேசு இவருக்கு வெளிப்பட்டு அருளுரை பாலித்ததாகவும் அன்று முதல் தான் திருந்தி விட்டதாகவும் அறிக்கையிடும் பவுலின் உபதேசங்களில்தான் இத்தகைய பாவ சித்தாந்தம் காணப்படுகிறது. பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ஒரே ஒரு மனிதன் வழியாகப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது, அந்தப் பாவத்தின் வழியாகச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. (உரோமையர் 5:12)

சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும் பவுல் கூறுகிறார்.

"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (1 கொரிந்தியர் 15:3,4)

"நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்." (உரோமையர் 4:25)

"நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?" (உரோமையர் 6:6,7)

இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அதனை நம்புவதன் மூலம் எல்லா மனிதர்களும் பாவங்களிலிருந்து விடுபடுவர் என்றும், அதன் காரணமாக இனி நியாயப் பிரமாணத்தின் ஏவல் விலக்கல்ககளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும்தான் பவுலுடைய வாதம்! நியாயப் பிரமணனங்களின் விதிகளைக் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று உபதேசிக்கும் பவுலின் கூற்றுகள்:

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். ரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார். (பார்க்க கலாத்தியர் 3:10-14)

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை. (ரோமயர் 3:20-22)

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே> ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

அதெப்படியென்றால்> புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்> புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

ஆகையால்> புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்> புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால்> வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.

அப்படிப்போல> என் சகோதரரே> நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி> தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். (ரோமர் 7:1-4)

இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டால் எல்லா பாவங்களும் மாய்ந்து போகும். அப்படி நம்பிய பிறகு நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசுவாசம் மட்டும் போதும். எத்தனை பெரிய பாவங்கள் செய்தாலும் சிலுவை மரணத்தை நம்புவதன் மூலம் எல்லாப் பாவங்களிலிருநதும் தூய்மையடைந்து வெற்றி பெற்று விடலாம் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைத்தான் மேற்கண்ட பைபிள் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன!

பவுலின் கொள்கைகள் - ஒர் மறுபரிசீலனை!

இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாகச் செயல்பட்டவர் பவுல்! இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் ஒரு நாளில் திடீரென்று தனக்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்று அறிக்கை விட்டார்! அவ்வாறு அறிவித்த விட்டு அவர் செய்த உபதேசங்கள் இயேசுவின் உபதேசத்துக்கு முரண் இல்லாமல் இருந்தாலாவது அவரது உபதேசங்களை ஒரளவுக்கு நியாயப் படுத்தலாம். ஆனால் அவை அத்தனையும் இயேசு எதனை சமுதாயத்திற்கு உபதேசித்தாரோ> எதை வலியுறுத்தினாரோ அதற்கு முற்றிலும் முரணாக உள்ளதைப் பார்க்கிறோம். இயேசு எதைக் கடைபிடிக்கச் சொல்கிறாரோ அதைக் கடைபிடிக்க வேண்டாம் என்கிறது பவுலின் உபதேசங்கள். இந்த இடத்தில் தான் சற்று நிதானமாக சிந்தித்து இதில் நடுநிலையான ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிப்பதைக் குறித்து இயேசு கூறியது என்ன?

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான் இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோபரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5: 17- 19 )

மேற்கண்ட பைபிளின் வசனங்களை சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!

நியாயப் பிரமாணங்கள் எக்காலத்திலும் மாற்றப்படாது என்று இயேசு கூறுகிறார்! அது மாற்றப்பட்டது என்று உபதேசிப்பவன் பரலோகத்தில் சிறுமைப் படுத்தப்படுவான் என்றும் எச்சரித்துள்ளார்! ஆனால் இதற்கு முரணாக நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பவுல்! இதில் எதை ஏற்றுக் கொள்வது?

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடித்தல் என்ற ஒழுங்கு முறை இயேசுவின் மரணத்திற்குப் பின் மாற்றப்பட்டது என்றால் இவ்வாறு மாற்றப்படும் என்பதைப் பற்றி இயேசு ஏன் ஒரு வார்த்தை கூட முன்னறிவிப்பு செய்யவில்லை? வானம் பூமி ஒழிந்து போனாலும் நியாயப் பிரமாணத்தின் ஓர் எழுத்தோ அல்லது ஓர் எழுத்தின் ஒரு பகுதியோ மாற்றப்படக் கூடாது என்று உபதேசிக்க வேண்டிய அவசியம் என்ன? நியாயப் பிரமாணம் மாற்றப்படும் என்ற பேருண்மையை இயேசு மறைத்து சமுதாயத்திற்கு மோசடி செய்து விட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறப்போகிறார்களா?

ஓர் இறைதூதர் தன் சமூகத்திற்கு மோசடி செய்வதை விட்டும் பரிசுத்தமானவர் என்றே நாம் நம்புகிறோம். பைபிளின் பழய ஏற்பாட்டையும் ஒருமுறை படிப்பவர்கள் இவ்விஷயத்தில் இயேசுவின் உபதேசங்களாகக் காணப்படுபவை முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசத்திற்கு சற்றும் முரண் இல்லாமல் உள்ளதையும் பவுலின் உபதேசங்களாகக் காணப்படுபவற்றில் உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்!

ஆதிபாவமும் பழய ஏற்பாடும்!

ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகப் பிறக்கின்றன என்ற புதிக கிறிஸ்தவ சித்தாந்தம் பைபிளின் முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசங்களில் இல்லை! இயேசுவும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. பிற்காலத்தில் பவுல் உருவாக்கிய பாவக் கொள்கைக்கு எதிராகவே பைபிளின் பழய ஏற்பாட்டின் வசனங்கள் உள்ளன. அவற்றில் சில:

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும். (உபாகமம் - 24:16)

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். (எசேக்கியேல் 18:20)

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். (எரேமியா 31:30)

ஆதிபாவமும் இயேசுவின் கூற்றுக்களும்!

பிள்ளைகளை ஒருபாவமும் அறியாதவர்கள் என்று நாம் கூறுவதுண்டு. பாவத்திலிருந்து தன்னைப் பரிசுத்தப் படுத்திக்கொள்ள விரும்புபவர்களை குழந்தைகளுக்கு ஒப்பாக இயேசு உவமிக்கின்றார். பிறக்கும் குழந்தைகள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்ற உண்மையை இயேசு தெளிவு படுத்துகிறார்.

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு: 18:3)

இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத்தேயு: 19:14)

இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. (மாற்கு 10:14)

பாவ சித்தாந்தமும் இறை வேதமும்!

பிற்காலத்தில் மனித சிந்தனையில் உதயமான ஆதிபாவம் என்ற கொள்கையை முந்தைய தீர்க்கதரிசிகளோ அவர்கள் கொண்டுவந்ததை எடுத்துபதேசித்த இயேசுவோ சொல்லியிருக்கவில்லை என்பதைப் பார்த்தோம். முந்தைய வேதற்களை உண்மைப் படுத்தி நிலைநாட்டக் கூடிய இறுதி வேதம் குர்ஆனில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

"எந்தவேர் ஆத்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது!" (53:38)

"அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் தேடுவேன்? அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கிறான் என (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது. பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" (6:164)

கருணை மிக்க அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) செய்த தவறை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் பறைசாற்றுகிறான். இது குறித்த வசனத்தைப் பாருங்கள்:

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்புக் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்" (2:37)

ஆதமின் மனமுருகிய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அந்த வேண்டுதல் யுக முடிவு நாள் வரை பாவம் செய்பவர்கள் எவராயினும் மனமுருகி மன்னிப்புக் கோரியவர்களுக்குரிய பிரார்த்தனையாக குர்ஆனில் நிலை பெற்று விட்டது! ஆதம் செய்த பாவத்தின் பரிகாரத்தை எவரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை! இதுவே இறைவழிகாட்டுதலில் நமக்குக் கிடைத்த செய்திகளாகும்!

பிறக்கும் எந்தக் குழந்தையும் பிறவியில் பாவியாகப் பிறப்பதில்லை. மாறாக தூய்மையான இயற்கையிலேயே பிறக்கின்றன என்ற உண்மையை என்ற உண்மையை இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஃபித்ராவில்) பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர். ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போல! அவை குறைபாடு உள்ள நிலையில் பிறப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?" (புகாரி, முஸ்லிம்)

பவுலின் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்கள்:

இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாக இருந்தவர் பவுல்! இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவர் பவுல்! அவர் உருவாக்கிய பாவ சித்தாந்தமும் அதை ஒட்டியுள்ள சிலுவைக் கொள்கையும் இயேசுவின் உபதேசங்களுக்கு முரணாக உள்ளன. இது தனக்கு திடீரென வெளிப்பாடு ஏற்பட்டது என்று கூறும் செய்தியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

சிலுவை மரணம் சாபத்திற்குரியதாக பழய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததன் மூலம் அவரை உலகுக்கு முன் சபிக்கப்பட்டவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் ஆசையாக இருந்தது. யூதர்களின் இந்த ஆசையை பவுல் வஞ்சப் புகழ்ச்சியின் மூலம் தன்னுடைய உபதேசங்களாக உள்ளவற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்:

"மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்" (கலாத்தியர் 3:13)

இறைதூதர்கள் அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! சபிக்கப்பட்டவரை ஒரு வழிகாட்டியாக எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவரை நோக்கி இவர் சபிக்கப்பட்டவர் என்றால் அவரை வழிகாட்டி என்று அறிவுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஷைத்தானை சபிக்கப்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இந்த பவுலோ இறைவனின் நேசத்திற்குரிய ஓர் அடியாரை சபிக்கப்பட்டவராக அறிமுகப் படுத்துகிறார். பவுலின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள தந்திரங்களை கிறிஸ்தவர்கள் அறிந்து சத்தியத்தின் பால் தன் கவனத்தைத் திருப்புவது நலம்!