Friday, September 23, 2011

'அஞ்சா நெஞ்சர்'' அபூதர் அல் கிஃபாரி[ரலி]

بسم الله الرحمن الرحيم

அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்;
எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள், அபூதர்[ரலி] அவர்கள் தன்னிடம் கூறியதாக பின்வருமாறு கூறினார்கள்:

''நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார்.

நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

[நபி ஸல்] அவர்களை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன்.

காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் நபி(ஸல்) அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள்.

நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள்.

இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள்.

அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன்.

உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]

மேற்கண்ட பொன்மொழியில் இஸ்லாத்தை நாடி, நபியவர்களை தேடி, சத்திய மார்க்கத்தில் சங்கமித்த அபூதர்[ரலி] அவர்களிடம், அபூதர் அவர்களே! உங்களின் சன்மார்க்க பிரவேசத்தை சில காலம் மறைத்து கொள்வீராக! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியும், அபூதர்[ரலி] அவர்களின் உள்ளத்தில் புகுந்த ஏகத்துவ கலிமா, அவர்களை எட்டுத்திக்கும் முரசறைந்து ஏகத்துவத்தை முழங்கச் செய்தது. அதனால்தான் அன்றைக்கு முஸ்லிம் என்றாலே [உயிர்]மூச்சுக்கு உத்திரவாதமில்லை என்ற காலகட்டத்தில்,
குறைஷிகள் முன்பாக உரக்க கர்ஜித்தார் ஏகத்துவ கலிமாவை; ஏந்தல் அபூதர்[ரலி] அவர்கள்.

பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர்களில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவர். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில் இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது என்பதற்கு, இதோ! தனி மனிதராக ஏகத்துவ சங்கநாதம் முழங்கிய அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களின் வாழ்வு, அசத்தியத்திற்கு எதிராக, சத்தியத்தின் குரலை எங்கும் எதிலும் ஒலிக்கும் துணிவை நமக்குத் தரும் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூதர்[ரலி] அவர்களை பொருந்திக் கொண்டு, சுவனத்தில் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவானாக!

-முகவைஅப்பாஸ்.

Friday, September 16, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஒரு பார்வை!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தை பற்றி விமர்சிப்பவரா நீங்கள்? அதனுடைய செயல்பாடுகள் இதுவரை உங்களுக்கு என்னவென்று தெரியவில்லையா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் மனதிலே உதிக்கின்றனவா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு பதில் தரும் என்று நம்புகிறேன்...!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள்:


நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ
சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் உயிரும், மானமும் மலிவாக பலியாக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் வி.டி. இராஜ சேகர் போன்ற மாற்று சமுதாய தலைவர்களே ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட அதே வழிமுறைகளைத்தான் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்த காலச் சூழ்நிலையில், இந்தியாவில் இஸ்லாம் நிலை நிறுத்தப்படவேண்டும், இஸ்லாமிய சமுதாயம் மானத்தோடும், கண்ணியத்தோடும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உண்ணத இலட்சியங்களோடு இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகக் கொண்டு கேரள மாநிலத்தில் ஒரு சில சகோதரர்களால் சரியான மாற்று திட்டங்களோடும், அடித்தளத்துடனும் துவங்கப்பட்டதுதான் இந்த "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்று இந்திய மக்களால் அறியப்படும் ஒரு தேசிய இயக்கமாகும்.
இன்று இதன் வளர்ச்சி பல மாநிலங்களை கடந்து தேசிய அளவில் குறிப்பாக வட மாநிலங்களில் பலமாக அடித்தளமிட்டுவருகிறது. இதே லட்சியத்தோடு சமுதாயத்தில் பல்வேறு கிளைகளையும் உருவாக்கி ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற உண்ணத நோக்கோடு பல துணை பிரிவுகளை நாடு முழுவதும் உருவாக்கி நடத்தி வருகிறது. கொள்கையே இல்லையென்றால் ஒரு அமைப்பால் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைய முடியாது என்பது சிந்திப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும் என கருதுகிறேன்.

ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு இயக்கத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எல்லா அமைப்பிற்கும் பொதுவான விஷயம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இயக்கம் வளர்ச்சி அடைந்த பிறகு எம்.என்.பி (மனித நீதிப் பாசறை) என்ற பெயர் சூட்டிய பிறகு கொள்கைக்கு மாற்றமில்லாத வகையில் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஜனநாயகம் கூடாது என்று நிலையில் செயல்பட்டாலுல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களின் அவல நிலையை பார்க்கும்போது, இந்தியாவில் எல்லா குடிமக்களுக்கும் சமமான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கிடைக்கச்செய்யவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று அறிந்தவுடன் நாம் முன்னர் இருந்த நிலையை விட்டு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லா ரீதியான போராட்டங்களையும் செயல்படுத்த தொடங்கினோம்.

"உங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அப்படியானால் உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்" என்று திருமறைக்குர்ஆன் வசனத்திற்கேற்ப சமூகத்தின் ஒற்றுமைக்காக போராடி வரும் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.


சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல சமூகப்பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறோம். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ கடலூர் மாவட்டம் முதற்கொண்டு பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். யூதர்களால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டும், மேலை நாட்டவர்களால் பொருளாதார தடையின் மூலமாக கடுமையான நெருக்கடிக்கு ஆளான பாலஸ்தீன மக்களுக்காக வீதிதோறும் இறங்கி மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தோம். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னால் பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதுகள், முக்கிய பஜார்கள் என பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலுமா சில ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிறக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, குடும்பத்தை இழந்து, அநாதைகளாயினர். அவர்களின் துயரை துடைக்க நம்மாலான முயற்சியாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வீடுவீடாக சென்று துணிமணிகளை பெற்று அவர்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

பிஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஃபித்ரா கடமையுள்ளவர்களிடமிருந்து ஃபித்ரா பணத்தை வசூலித்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை கடந்த பல வருடங்களாக செய்து வருகிறோம். மாவட்டம் ரீதியாக வசூல் செய்த பணத்தின் கணக்கு விபரங்களை ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்திற்கு பிறகு வெளிவரும் "விடியல் வெள்ளி"என்னும் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகிறோம்.


கோவை சிறைவாசிகளுக்காக தொடர்ந்து நமது இயக்கம் போராடி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும், சட்டத்தின் மூலமாகவும் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களுக்கு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.

கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்டின் பொருளாதார நிலை:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முழு நேர ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை இயக்கத்தின் உறுப்பினர்கள் தரும் மாத சந்தாவிலிருந்து கொடுக்கப்படுகிறது. மேலும் ரமலான் மாதத்தில் ஜகாத் வசூலித்து அதன் மூலம் சமூகப் பணிகளை செய்து வருகிறது. மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாநாடுகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, மற்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றிற்கும் சமூக பணிகளில் அக்கறை உள்ளவர்களிடம் சென்று அவர்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்யுமாறு கேட்டதின் அடிப்படையில் அவர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நிர்வாகிகள் தேர்வும் செய்யும் முறை:

பாப்புலர் ஃப்ரண்டின் கிளை நிர்வாகிகள் முதற்கொண்டு தேசிய நிற்வாகிகள் வரை ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கே தனி மனித ஆதிக்கத்திற்கு இடமில்லை. இங்கே தன்னாட்சி செய்யும் தனி நபர்கள் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தெளிவான ஜனநாயக முறையில் (இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டில் கட்டுப்படுதலும், செயல்பாடுகளும் தான் முக்கியமே தவிர தனி நபர்களுக்கு முக்கியத்துவமில்லை.

சுதந்திர தின அணிவகுப்பு:



இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதியில்லை என்று சங்கப்பரிவாரங்களும், உளவுத்துறையினரும் கைகோர்த்து செயல்பட்ட காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது கொடி அணிவகுப்பை நடத்தி "உங்களை அழித்தொழிக்க எங்கள் படை தயாராகிவிட்டது!" என்று அச்சுறுத்திய நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்ட சிறப்பான செயல்திட்டம் தான் முஸ்லிம்களின் சுதந்திர போராட்ட தியாகங்களை வெளிக்கொண்டு வரும் முகமாகவும், சுதந்திர தினத்தை தடையின்றி நெஞ்சு நிமிர்த்தி கொண்டாடுவோமென்றும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்களும் தயாராகிவிட்டோமெனவும் எழுச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பினை நடத்தி வருகிறது.

அதில் ஒரு பகுதிதான் பேண்டு வாத்திய முறையும். பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் தேசியக்கொடிக்கு மதிப்பவர்கள். ஆனால் அதற்கு ஒரு சக்தி இருப்பதாகவோ அல்லது அதை வணங்கவோ செய்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்.

"எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமையும்" என்பது நபிமொழி. அல்லாஹ் உங்கள் உடைகளையோ, உடைமைகளையோ பார்ப்பதில்லை மாறாக உங்களது உள்ளங்களைத்தான் பார்க்கின்றான் என்பது குர்ஆன் கூறும் வார்த்தைகள். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஏக இறைவனைத் தவிர யாரையும், எதையும் வணங்கமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.

தீவிரவாதத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் ஆதரிக்காது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் குண்டுவெடிப்பு போன்ற முட்டாள்த்தனமான செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, அதனை செய்ததும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வெறிபிடித்த இயக்கங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்துத்தந்திருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி சமுதாய இளைஞர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவிரீதியாகவும் பலப்படுத்தும் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறது.




மஹாத்மா காந்தி அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான ஹஜ்ரத் உமர் (ரழி) அவர்கள் செய்த ஆட்சியை போன்று கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அது போன்ற ஆட்சி முறையை கொண்டு வர முடியாவிட்டாலும் கூட அதற்கான முயற்ச்சிகளைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்து வருகிறது. நன்மையை ஏவி திமையை தடுக்கும் பணியில் அரசியலும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பாக தென் இந்தியாவில் (கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு) மட்டுமே செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் தற்போது வட மாநிலங்களில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்!) அதற்கான ஆரம்பம்தான் பி.ஜே.பி சங்கப்பரிவாரங்களின் கோட்டையாக இருந்த ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கடுமையாக போராடினார்கள். இறைவன் அருளால் வெற்றி பெற்றார்கள்.

தோழமை உணர்வு:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த போராட்டங்களாக இருந்தாலும் சரி அவ்வனைத்திலும் சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளை அழைக்காமல் இருந்ததில்லை. என்ன தான் சமூக இயக்கங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் பொருட்டு சமூகத்தின் எல்லா இயக்க நிர்வாகிகளையும் நமது நிகழ்ச்சிகளுக்காக அழைத்துள்ளோம். அதே போன்று அவர்கள் அழைத்தும் நமது நிர்வாகிகள் கலந்தும் கொண்டிருக்கிறார்கள்.

தமுமுக‌வைச் சேர்ந்த சகோதரர் ஹாஜா கனி






கே.எம்.ஷரீஃப் (தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் நாடு)


















சரியாத்
பாதுகாப்பு பேரவை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் நாடு தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில்


இன்று அல்லாஹ்வினுடைய உதவியைக் கொண்டு நமது இயக்கம் பல்வேறு பரினாமங்களாக வளர்ந்து அடர்த்தியான வேறுடன் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி வருகிறது. "பாப்புலர் ஃப்ரண்ட்" என்று கோஷமிட்டால் "ஜிந்தாபாத் ஜிந்தாபாத்" என்று கூறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் நமது சகோதரர்கள் உண்டு (குஜராத் உட்பட). சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் போராடிவருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். அதனுடைய வெளிப்பாடு தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக இன்று ஊடங்களால் வெளியிடப்படும் அவதூறு செய்திகள்.

"அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! ஆனால் அல்லாஹ்வோ சூழ்ச்சியாளர்களெக்கெல்லாம் சூழ்ச்சியாளன்" எனவே அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு லட்சியத்தை நிச்சயமாக ஒரு நாள் அடைந்தே தீருவோம்! இன்ஷா அல்லாஹ்!

எனவே ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்பி விடவேண்டாம். அது நல்ல செய்தியாக இருந்தாலும் சரியே! ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்...

முஃமீன்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதை தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்ததைப் பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் குர்ஆன் 49:6)


யாவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

Friday, September 9, 2011

மக்கள் மனங்களைக் கவர

இரகசியம் பேணுதல்:-
நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.

அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர்.

இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.

உமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(ث) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.

இவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்!” என்று கூறினார்கள்.

உஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை!” என்று கூறினார்கள்.

இதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களது திருமணம் தொடர்பாக அபூபக்கர்(ரழி) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் பேசினார்கள். அவர் ஒன்றும் கூறவில்லை. இவர் எந்தப் பதிலும்; தராததால் உமர்(ரழி) அவர்கள் வருத்தப்பட்டார்கள்.

இதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பெண் கேட்டு மணமுடித்தார்கள்.

இதன் பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் ஹப்ஸா விடயமாகப் பேசிய போது நான் பதிலளிக்காதது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் “ஆம்!” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா பற்றிப் பேசினார்கள்! நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது! மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன்! அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன்!” என்று கூறினார்கள்.
(புஹாரி- 4005)

அபூபக்கர்(ரழி) அவர்கள் தனது நண்பரும் நபியுமான அல்லாஹ்வின் தூதரின் இரகசியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.

ஒருவரிடமும் கூற வேண்டாம் என்று கூறும் செய்தியை அதே போன்று ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று நாமும் கூறிவிடுகின்றோம். அவரும் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று கூறுகின்றார். இப்படியே இரகசியம் பரகசியமாகின்றது.

சிலர் நகமும் சதையும் போல ஒன்றாக இருந்து விட்டு ஏதேனும் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டால் அவர் அப்படி இப்படி என்று பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பிப்பார்கள்; இரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்.

இத்தகையவர்கள் நட்புக்கொள்ள அருகதையற்றவர்கள். அவர்களிடம் தூய அன்பையோ, நல்ல நட்பையோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.

நண்பன் எதிரியானாலும் அவன் நட்புடன் இருந்த போது நடந்த இரகசியங்களைப் பேணுவது கட்டாயமாகும்.

ஆனால், சிலர் எதிர் காலத்தில் பகையாளியாக ஆகிவிட்டால் பழிவாங்குவதற்காகவே நட்போடு இருக்கும் போதே திட்டமிட்டு செயற்படுகின்றனர். இரகசியங்களைச் சேகரித்து அதற்கான சாட்சியங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்களாகின்றனர்.

தீமையை நன்மையைக் கொண்டு தடுத்தல் :-
மனிதன் அடுத்தவர்களுடன் இணைந்து வாழும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பல எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். தனது எதிரிகளை எதிர்ப்புணர்வுடனும் எதிர்கொள்ளலாம்.

அவ்வாறு எதிர்கொள்ளும் போது போபமும், குரோதமும் அதிகரிக்கும். எதிரிகளை அவர்களே நாணிக் கூணிப் போகும் அளவுக்கு நன்மை மூலம் எதிர்கொள்ளலாம் இதன் மூலம் எதிரியின் எதிர்ப்புணர்வு நட்பாகக் கூட மாறலாம்.

எனவே அன்பும் நட்பும் வளர மக்கள் மனங்களைக் கவர தீமையை நன்மை மூலம் தடுத்தல் என்பது நல்ல வழியாகும்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இரும்பை இரும்பால் தான் அறுக்க வேண்டும் என்ற தத்துவம் கூறுவர் பலர். இது அன்பை வளர்க்க வழி வகுக்காது.

இது குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;

“எது மிகச் சிறந்ததோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்.” (23:96)

“நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்.” (41:34)

நபி மொழிகளில் இதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் தனது பகிரங்க எதிரிகளான துமாமா, ஹிந்தா, வஹ்ஸி போன்றோரை மன்னித்து இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்த்தார்கள். தன்னையும் தனது தோழர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்தவர்களையும், தனது தோழர்கள் பலரைக் கொலை செய்து ஊரை விட்டும் விரட்டியடித்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அவர்கள் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றினார்கள்.

அபூஸினா(ரழி) அவர்கள் அறிவிக்கும் துமாமா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் இந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிகழ்வாகும்.

தூமாமா என்பவர் யமாமாவின் சிற்றரசராவார். அவர் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தார். நபி(ஸல்) அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

ஒரு முறை முஸ்லிம்கள் இவரைக் கைது செய்தனர். இவரை இனம்காணாத அவர்கள் இவரை மஸ்ஜிதின் தூணில் கட்டிவைத்திருந்தார்கள்.

இவரைப் பார்வையிட்ட நபி(ஸல்) அவர்கள் “துமாமாவே உங்களது நிலை என்ன?” எனக் கேட்ட போது,

“நான் செய்த குற்றங்களுக்காக என்னை நீங்கள் கொல்வதாக இருந்தால் என்னைக் கொல்லலாம்.

என்மீது நீங்கள் இரக்கம் காட்டினால் நன்றியுடைய ஒருவருக்கே நீங்கள் இரக்கம் காட்டுகின்றீர்கள்.

நீங்கள் செல்வத்தை விரும்பினால் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்!” எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் துமாமாவை விடுதலை செய்தார்கள். அவர் குளித்து விட்டு ஷஹாதா கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றார்கள்.

அப்போது அவர் “இந்த உலகிலேயே உங்கள் முகம்தான் எனக்கு வெறுப்பான முகமாக இருந்தது. இப்போது உங்களது முகம்தான் எனக்கு எல்லா முகங்களை விடவும் நேசத்திற்குறிய முகமாகத் திகழ்கிறது” என்று கூறினார்கள். (புகாரி 4372, முஸ்லிம் 4688)

நபி(ஸல்) அவர்களதும் நபித் தோழர்களினதும் மிகப்பெரிய எதிரியாக இருந்த துமாமா இஸ்லாத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார். நபி(ஸல்) அவர்களை வெறுத்த அவர் தனது உயிரை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.

எனவே, தீமையைத் தீமை மூலம் தடுக்காமல் தீமையை நன்மை மூலம் தடுப்பதனால் அன்பும் நட்பும் வளரும்.

எனவே, எதிரிக்கும் நன்மை செய்து அன்பை வளர்க்கவும், உள்ளங்களை வெல்லவும் முயல்வோமாக.

நற்பண்புகள்:-
பிறரது உள்ளத்தை ஈர்க்கவும், அன்பையும் நட்பையும் பெற்றுக்கொள்ளவும் நாம் நற்பண்புள்ளவர்களாகத் திகழ்வது அவசியமாகும். மக்கள் நம் மீது மதிப்பு வைக்கவும், நாம் கூறுவதைக் கேட்டு நடக்கவும் இது பெரிதும் உதவும். நபி(ஸல்) அவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களது உயர்ந்த நற்பண்புகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். நபித்துவத்திற்கு முன்னரே அஸ்ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்ககையாளர்) என மக்களால் போற்றத்தக்க விதத்தில் நபி(ஸல்) அவர்களது நற்பண்பு உயர்ந்து திகழ்ந்தது.

நபி(ஸல்) அவர்களிடம் இயல்பாகக் காணப்பட்ட மென்மையான போக்கு அன்பு, பாசம், கருணை, பிறருக்கு உதவும் பண்பு போன்ற எண்னற்ற நற்குணங்களால் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே பிறரது அன்பையும், நட்பையும் பெற விரும்புவர். பிறர் மீது தனது ஆளுமையைப் பிறயோகிக்க விரும்புவர் எவராயினும் நற்பண்புகள் அதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு நடத்தல் அவசியமாகும்.

மென்மையான போக்கு:-
தவறைக் கண்டிக்கும் போதும் சாதாரனத் தொடர்பாடலின் போதும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் பிறரது அன்பை நாம் பெறமுடியும். கடுமையான போக்கு நண்பர்களையும் எதிரியாக்கி விடும். நெருங்கி வருபவர்களையும் தூரப்படுத்தும்.

“(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்துகொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.” (3:159)

நபி(ஸல்) அவர்களைச் சூழ எப்போதும் நபித் தோழர்கள் திரண்டிருப்பர். இதற்கு அவர்கள் போதித்த போதனை மட்டும் காரணம் அல்ல. அவர்களது மென்மையான போக்கும் காரணம் என மேற்படி வசனம் கூறுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கடும் சொல் சொல்பவராகவும் கடுகடுப்பானவராகவும் இருந்திருந்தால் இந்த நபித் தோழர்களெல்லாம் எப்போதோ அவரை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் கூட மிக மென்மையான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். உணவில் தனக்கு விஷம் கலந்த பெண்ணுடனும், தான் உறங்கும் போதும் தன்னைக் கொலை செய்ய சதி செய்தவனுடனும் கூட அவர்கள் மென்மையான போக்கைக் கைக்கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.

தன்னுடன் கூட இருப்பவர்கள் தன்னைச் சூழ இருப்பவர்கள் தவறு செய்யும் போது மென்மையாகவே அந்தத் தவறுகளைச் களைய முயன்றுள்ளார்கள்.

அதனால் அவர்கள் அனைவரதும் அன்பையும் நட்பையும் பெற்றார்கள்; அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்கள்.

ஒரு நாட்டுப் புற அறபி மஜ்ஜிதுக்குள் சிறுநீர் கழிக்க முயன்ற போது நபித் தோழர்கள் அவரைத் தடுக்க முற்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தனது தோழர்களைப் பார்த்து “அவரை விடுங்கள்! அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும்! நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல!” எனக் கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுமாறு கூறினார்கள்.
(புகாரி 220, 6128, முஸ்லிம் 685, திர்மிதி 147)

பின்னர் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தவரை அழைத்து “இது அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் இடமாகும்! இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது! இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும்!” என இதமாக எடுத்துக் கூறினார்கள். (அஹ்மத் 12984)

மஸ்ஜிதுக்குள் சிறுநீர் கழித்த அவரிடம் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளார் என்பதை அவதானியுங்கள். அந்த மனிதரிடம் பேசும் போது நபி(ஸல்) அவர்கள் அவரை எந்த விதத்திலும் கடிந்துகொள்ளவில்லை. குறைத்துப் பேசவுமில்லை. எவ்வளவு இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டிய விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இதனை உணர்த்தும் மற்றுமொரு நிகழ்ச்சியையும் நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.

ஆரம்பத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவதும் பதில் கூறுவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. முஆவியதிப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,

“நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மி விட்டு “அல்ஹம்துலில்லாஹ்!” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்!” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்!” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது! அதில் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் தக்பீர்கள் அவனது வேதத்தை ஓதுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்;று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1227, 33 – அபூதாவூத்: 931, 930)

இந்த அடிப்படையில் மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும். கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.

எனவே மென்மையான போக்கைக் கைக்கொள்வதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர முனைவோமாக!

அழகிய தோற்றம்:-
அழகை விரும்பாதவர் எவருமில்லை. அசிங்கத்தையும், அறுவருப்பையும் கண்டு விலகி ஓடுவதே மக்கள் இயல்பாகும். பிறர் தன் மீது நேசம் வைக்க வேண்டும்! மற்றவர்கள என்னுடன் நெருங்கிப் பழக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்தே மக்கள் மனிதனை எடைபோடுகின்றனர். எனவே ஆடைகள் அழகானதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள்! கண்ணியமான ஆடை என்பது ஆளுமையை உயர்த்திக் காட்டும். இத்தகையவர்களுக்கு வார்த்தைக்கு மக்கள் அதிக மளிப்பளிப்பர்.

வெளித்தோற்றத்தை அழகு படுத்துவதில் தலைமுடிக்கும் அதிக பங்குள்ளது;

அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
“யாருக்கு தலை மயிர் உள்ளதோ அதை அவர் கண்ணியப்படுத்தட்டும்!.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4165, 4163)

இவ்வாறே நடை, உடை, பாவனை அனைத்தையும் அழகாக வைத்திருப்பது மக்களை நம்மிடம் நெருக்குவதாக இருக்கும்.

சிலர் சமூக அந்தஸ்துப் பெற்ற பெரியவர்களாக இருப்பர். இவர்களது ஆடை நடைமுறையும் அவர்களுக்கு அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக இருக்கும். எனினும் அவர்கள் ஒழுங்காக வாய்ச் சுத்தம் செய்யாததால் நெருங்கிக் கதைப்பவர்கள் முகத்தை சுழிக்கின்றனர். எப்போது விஷயம் முடியும் எழுந்து ஓடிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கதைப்பர். பிறர் நம்மை அண்டி வருவதில் பல் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்யும் போதும் பல் துலக்குவது கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்று வீடு வந்தால் முதலில் பல் துலக்குவார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.

வெற்றிலை சாப்பிடுவோர், புகை பிடிப்போர் தமது அருவருப்பான வாய் தோற்றம், நாற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது இவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் தமது மனைவியர் தம்முடன் இல்லறத்தில் ஈடுபடும் போது எவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வர் என்பதையாவது இவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் தமது வாயிலிருந்து கெட்ட வாடை வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.

அத்துடன் நல்ல மணம் வீசும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சுன்னாவாகும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள் சிவந்த தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களது வியர்வை முத்துப் போல் இருக்கும். நபி(ஸல்) அவர்களது கரத்தை விட மென்மையான பஞ்சையோ! பட்டையோ! நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களை விட அதிக மனம் உள்ள கஸ்தூரியையோ! அன்பரையோ! நான் மணந்ததில்லை.
(முஸ்லிம் 82, 6200, அஹ்மத் 13374)

எனவே அழகிய ஆடை அமைப்பு, நாகரீகமான சிகை அலங்காரம், உடல் சுத்தம், வாய் சுத்தம், நல்ல வாசனை என்பன போன்ற பிறரைக் கவரக்கூடிய அம்சங்கள் எம்மிடம் குடிகொள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் மக்கள் நம் மீது நேசம் கொள்வர். நெருங்கி வருவர். நமது தோற்றம் அவர்கள் மீது ஆளுமை செலுத்தும் வண்ணமிருந்தால் நாம் கூறுவதை அவர்கள் கேட்பார்கள். தஃவாவிற்கு இது பெரிதும் உதவியாக அமையும். எனவே உங்கள் வெளித்தோற்றத்தை அழகானதாகவும், பிறரைக் கவரத்தக்கதாகவும் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

குறை கூறுவதை விட்டுவிடுங்கள்:-
சிலர்; எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எதிலும் அவர்கள் நிறை காண மாட்டார்கள். குறை காண்பதில் கிள்ளாடியாக இருப்பார்கள். இத்தகையவர்களை மனிதர்கள் நேசிக்க மாட்டார்கள். நெருங்கி இருக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிறரை வாழ்த்தவும், போற்றவும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும் போதும் சில நிறைகளைச் சுட்டிக்காட்டி இந்தக் குறையை மட்டும் திருத்திக் கொண்டால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும் என நாசுக்காகக் குறையைச் சுட்டிக்காட்ட முடியும்;. இதற்கு மாற்றமாகச் சிலர் எந்த நன்மையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். குறைகளை மட்டும் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடுவர். அதே நேரம், தனது இந்த நடத்தை பற்றி போற்றிப் புகழ்ந்து கொள்வர். நான் அப்படித்தான் யாரெண்டும் பார்க்க மாட்டேன் முகத்துக்கு முகம் நேராகச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் கூறுவர். இத்தகையவர்களது முன்னிலையில் மக்கள் சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கண்டால் விலகி ஓட விரும்புவர்.

அனஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,
“நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளேன்! அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை! நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை! செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை? எனக் கேட்டதில்லை.
(திர்மிதி 2015, அஹ்மத் 13035, 13373)

நபி(ஸல்) அவர்கள், இப்னு உமர் (வ) அவர்கள் பற்றிக் கூறும் போது “இப்னு உமர் நல்ல மனிதர்! இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும்!” என்று கூறினார்கள். இதன் பின்னர் இப்னு உமர்(ரழி) சிறிது நேரமே உறங்குபவர்களாக இருந்தார்கள். (புகாரி 1122, 1157, 3739, முஸ்லிம் 6525)

குறையைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது எளிதில் பயனளிக்கும். எனவே, குறையை மட்டும் பார்க்காது நிறையையும் பார்க்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறையைப் போற்றி குறையை நாசூக்காகக் கூறக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பர். மக்கள் மனங்களைக் கவர முடியும்.


- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

Saturday, September 3, 2011

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்



(சத்தியமார்க்கம் இணையதளத்தில்இருந்து )



ஷவ்வால் மாத நோன்பு.

யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.


ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

BY : Abdul Samath/ ZS Saudi