Monday, October 12, 2015

தீரன் திப்பு சுல்தானின் கடைசி நாளில்…

காவிரியாற்றின் இரு கிளைகளில் உண்டான தீவு ஸ்ரீரங்கப்பட்டிணம், காவிரியின் மேல் முடிவில் அமைந்திருக்கிறது. ஹைதர் அலீ காலத்தில் இது மைசூர் ராஜ்யத்தின் தலைநகரமாயிற்று. இதனைக் கைப்பற்றிட வெள்ளையர் சூழ்ச்சி, துரோகம் செய்து இறுதியில் மாவீரன் திப்பு சுல்தானை வீழ்த்தினர்.
14.02.1799ல் ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் 21,000 வீரர்களைக் கொண்ட பெரும்படை வேலூரில் அணிவகுத்து அன்று இரவே அப்படை மைசூர் எல்லையை நோக்கிப் புறப்பட்டது.

20.02.1799ல் ஆம்பூர் அருகே ஹைதராபாத்திலிருந்து வெல்லெஸ்லியின் தலைமையின் கீழ் வந்த 16,000 வீரர்களும் சேர்ந்து கொண்டனர்.
6420 வீரர்களைக் கொண்ட பம்பாய் இராணுவம் ஜெனரல் ஸ்டூவர்ட் தலைமையில் கண்ணுர் அருகே அணிவகுத்து தயாரானது.
கர்னல் ரீட் மற்றும் கர்னல் பிரவுன் தலைமையிலான ஆங்கிலேய படைகள் திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து அணிவகுத்து 5.03.1799ல் மைசூர் எல்லைக்குள் நுழைந்தன.

11.03.1799 வரை பெரியபட்டிணத்திலே இருந்து  திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வந்தார்.
மைசூர் படையின் தளபதிகள் ஆங்கிலேயர்களுடன் திருட்டுத் தொடர்பில் இருந்ததால், வெள்ளையரது முன்னேற்றத்தை தடுத்திடவில்லை.
18.03.1799ல் நடந்த போர் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி கூறுகின்றார். “முன்னெப்போதும் இல்லாத அளவில் திப்புசுல்தானின் படை மிக அற்புதமாக இருந்தது. திப்புவின் காலாட்படை மிக முன்னேறியிருந்தது. ஆங்கிலேயரின் 33வது படையை திப்புசுல்தானின் படைகள் துவம்சம் செய்தன. திப்பு சுல்தானின் குதிரைப்படை, ஜெனரல் பெயர்ட்டின் ஐரோப்பிய படையை ஓட ஓட விரட்டியடித்தது.
வெள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும் திப்புசுல்தான் படைகள் உடனே போரில் இறங்கியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை திப்புவிற்கு துரோகம் இழைக்கப்பட்டது. இதனால் வெள்ளையர் முன்னேறினர். போரில் தோல்வி என்பது சுல்தான் நம்பி களம் இறக்கிய தளபதிகள் செய்த துரோகத்தால் விளைந்தது ஆகும். பூரணய்யாவும் அலீ சயீத் சாகிபும் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. அவர்கள் அந்த தருணத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று தங்களது சக்தியைக் காட்டியிருக்க வேண்டும்.

கமர்உத்தீன்கான் தனது குதிரைப்படையுடன் ஆங்கிலேயர் மீது போரில் ஈடுபடும்போது தவறு தலாக மைசூர் படை வீரர்கள் மீது தாக்குதல் விழுந்தது. அது அத்தனையையும் சீர்குலைத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்ச்சியில் திப்புசுல்தானின் தோல்வி தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.
போர்க்களக் காட்சிகள் வீரம் செறிந்தவை, துரோகம் மிகுந்தவை.

3.05.1799
ஸ்ரீரங்கப்பட்டணத்து கோட்டைச் சுவற்றில் முதல் உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று இரவு வெள்ளை அதிகாரிகள் அரண்மனை சரிவுகளில் கடந்து சென்று சுவற்றில் ஏற்பட்டிருந்த பிளவையும், கோட்டைத் தாக்குதல் முறையையும் ஆய்வு செய்தனர்.

4.05.1799
3,000 ஐரோப்பியர்கள், 2000 சுதேசி வீரர்கள் என ஐயாயிரம் பேர் வெள்ளையர் சார்பில் தாக்குதலைத் தொடுக்க தயாராக இருந்தனர். குறிப்பிட்ட நேரம் வந்தது. துரோகம் வெளிப்பட்டது. மீர் சõதிக் கோட்டையின் பிளவுப் பகுதியில் காவலுக்கு இருந்த தனது (திப்பு சுல்தானின்) படை வீரர்களை சம்பளம் போடப்படுகிறது என்று சாக்குச் சொல்லி அங்கிருந்து அனுப்பிவிட்டான்.
ஸ்ரீரங்கப்பட்டிணக் கோட்டையின் வடக்குப்பகுதியில் இரண்டு மதிற் சுவர்கள் இருந்தன. அதேபோல கிழக்கு மேற்குப்பகுதிக்கு எதிரிகளால் நெருங்க முடியாதபடி இரண்டு பெரிய நீண்ட ஆழமான அகழிகள் சுவர்களின் இரு மருங்குகளிலும் இருந்தது. தென் மேற்குப்பகுதியில் ஒரு பெரிய உயர்ந்த சுற்று வட்டமான சுவர் இருந்தது. கோட்டையின் உட்பகுதியிலும் தெற்கு சுற்றுச் சுவர்களின் உச்சியில் அதாவது மேல் தளங்களிலும் மறைந்திருந்து தாக்குவதற்குரிய முறையில் அமைந்து இருந்தது.
கோட்டைச் சுவர் 30 முதல் 35 அடி வரை உறுதியாகவும், கனமாகவும் இருந்தது. நீண்ட சதுரமான பாறைகளே உபயோகிக்கப்பட்டிருந்தன. பாறைகளை ஒன்று சேர்க்க பக்கவாட்டுகளில் கிளிஞ்சல்  சுண்ணாம்பும் காறையும் கொண்டு பூசப்பட்டிருந்தது.
கோட்டைக்கு நான்கு வாயில்கள் நான்கு திசையிலும் இருந்தன.
இந்தக் கோட்டையில் ஒரு சுவரில்தான் விரிசல் ஏற்படுத்தினர். பூர்ணய்யா, மீர் சாதிக், குலாம் உத்தீன் கான் ஆகிய மூவரும் வெள்ளையருடன் சேர்ந்து துரோகம் செய்தனர்.
மீர் சாதிக், திப்புவின் படைத்தளபதியில் ஒருவரான நாதிம் என்பவனை அழைத்து கோட்டைக் காவல் பட்டாளத்திற்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவதால், சம்பளம் பெற்றுப் போகும்படி அறிவிப்பு செய்தான். உள்கோட்டை காவல் வீரர்கள் நாதிம் கூற்றுப்படி நகருக்குள் சம்பளத்திற்காக காத்துக் கிடக்கும் வேளையில் கும்பினிப் படைகள் கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தன.
தீரன் திப்பு சுல்தானின் வீரமிக்க விசுவாசம் நிறைந்த தளபதி சயீத் கஃபார் பறங்கியரின் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார். சயீத் கஃபார் வீரமரணம் அடைந்ததும் கோட்டைக்குள் இருந்த துரோகிகள் எதிரிகளுக்கு சமிக்கை காட்டினர்.
கோட்டைக்குள் இருந்து வெள்ளை நிறக் கைக்குட்டையை அசைத்து அகழிக்குள் தயாராய்க் காத்து நின்ற கும்பினிப் படைகளுக்கு சமிக்கை செய்யப்பட்டது.
(பிரெஞ்சுக்காரர்களும் திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்தனர். 1798 ஏப்ரல் மாதத்தில் திப்பு சுல்தான் பிரெஞ்சுப் படையினர் 40,000 பேர் தனக்கு உதவிக்கு தேவையென்று கேட்டிருந்தார். ஆனால், பிரெஞ்சுப்படையினர் வெறும் நூறு மட்டுமே திப்புசுல்தானுக்கு உதவிக்கு அனுப்பப்பட்டனர்.
திப்புசுல்தான் ரிப்பார்ட் என்ற பிரெஞ்சுத் தளபதியின் உதவியாளரிடம் கப்பல் வாங்கக் கொடுத்த பணத்துடன் அவன் காணாமல் போனதும் துரோகம்தான்.)
திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த பிரெஞ்சு தேசத்து டியூபெக்கிடம் 4.05.1799 மதியம் 1 மணியளவில் மீர்சாதிக் சமிக்கை செய்தான்.
அதன்பின் கும்பினிப்படை தாக்குதலை தொடுத்தது. அன்று மதியம் 1.30 மணியளவில் மீர்சாதிக் வெள்ளைத் துருப்புகளுக்கு சமிக்கை செய்தான்.
ஹைதராபாத் நிஜாமுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே என்றுமே நேச உறவு இருந்ததில்லை. மராட்டியப் படைகள் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கைக்குப் பின் திரும்பிச் சென்றபோது எப்படி கொள்ளையிட்டு சென்றனவோ அவ்வாறே நிஜாம் படைகளும் அப்போது எதிரில் அகப்பட்ட பொருளைச் சூறையாடியதுடன் பயிர்களையும் அழித்து நாசம் செய்தன.
கர்னூல் ஜில்லா முழுவதையும் நிஜாம் வைத்துக் கொள்ள முயன்றதை திப்பு சுல்தான் ஏற்கவில்லை. இருவருக்கும் இடையே கசப்பு நிலையே இருந்தது. எனவே, நிஜாமும் திப்பு சுல்தானுக்கு எதிராகவே துரோகம் செய்தான்.
3.05.1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்து கோட்டைச் சுவரில் வடமேற்கு மூலையில் சுவர் மூச்சுவிட்டு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த திப்பு சுல்தான் அவைகளைப் பலப்படுத்திட உத்தரவிட்டார். ஆளுநர் மீர் சாதிக் ஒப்புக்கு சில பூச்சுகளை செய்து தனது துரோகத்தை வெளிப்படுத்தினான். ஆங்கிலேயர் குறி பார்த்து பீரங்கி கொண்டு தாக்கவும் சுவரில் பெரிய பாதை விழுந்தது.
4.5.1799 அன்று திப்பு சுல்தான் சத்திரத்திற்கு வந்தார். உணவை கொண்டு வர சொன்னார். சாப்பிடத் தொடங்க ஆரம்பித்தபோது சையத் கமரின் மரணச் செய்தியும் வந்தது. எழுந்து சென்ற திப்புசுல்தான் தன் எதிரே அரசாங்க ஊழியர்கள் கண்ணில் படாததால் தனது மெய்க்காப்பாளர் ராஜாக்கான் மற்றும் வேலைக்காரர்கள் இருபது பேருடன் சுவர் இடிந்த திசைக்கு ஓடினார். திப்பு அங்கு வருவதற்கு முன்பே வெள்ளையர் அப்பகுதியில் அவர்களது கொடியினை ஏற்றி இருந்தனர். பாதுகாப்பு அரண்களைக் கைப்பற்றவும் முன்னேறினர்.
கடும் போர் திப்பு சுல்தான் தரை இறங்கி சாதாரண போர் வீரனைப் போல போர்க்களத்தில் நின்று தனது வீர வாளைச் சுழற்றினார். திப்புவின் துருப்புகள் சிதறியிருந்தன. தனது குதிரையில் ஏறி தண்ணீர் வழிந்தோடிய மதகு அருகில் இருக்கும் சிறு வழியை நோக்கிச் சென்றார்.
திப்பு சுல்தான் தப்பிச் செல்ல நினைத்திருந்தால் அது அவருக்கு எளிதான ஒன்றாகவே இருந்திருக்கும். திப்பு சுல்தானுக்கு மிக அருகில் மதகு இருந்தது.
கோட்டையில் இடிந்த சுவர்ப் பக்கம் 600 அடி தூரத்தில் உயரமான சுவர் ஒன்று இருந்தது.
அந்தச் சுவரில் ஒரு சிறு கதவு. அதன் வழியாகத்தான் வீரர்களுடன் குதிரையை செலுத்திக் கொண்டு வந்தார் திப்பு சுல்தான்.
மீர் சாதிக் தந்திரமாக கோட்டைக் கதவின் உட்புறமாக நின்று கொண்டதோடு நில்லாமல் திப்பு சுல்தானும் அவருடன் வந்தவர்களும் போர்க்களம் சென்றபோது கதவைப் பலமாக மூடி தாள் போட்டு விட்டõன். மீர்சாதிக் உடனிருந்த மீர் நாயிம் தளத்தின் மீது ஏறி வேறு யாரும் கதவைத் திறந்து விடாதபடி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டான்.
கதவு மூடப்பட்டதை அறியாத தீரன் திப்பு களத்தில் எதிரில் வந்த ஆங்கிலேயர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்.
திப்புவின் காலில் காயம்பட்டது. குதிரையுடன் கோட்டைக்குள் செல்லலாமே என்றால் அந்தப் பக்கத்து கோட்டைக் கதவு மூடிக் கிடந்தது. மீர் நாயிம் குள்ள நரி போல மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். கதவைத் திறக்கவில்லை.
இப்போது தீரன் திப்புவிடம் அவரது மெய்க்காப்பாளர் ராஜாகான், “மன்னரே, தாங்கள் இன்னார் என்று தெரிவித்தால் உடனே கதவைத் திறப்பார்கள்” என்று ஆலோசனை சொன்னான். திப்பு சுல்தான் அதற்கு உடன்படவில்லை.
வாசல் அருகே வந்த திப்பு சுல்தான் இரண்டாவதாகவும் காயம்பட்டார். வெள்ளையர் படை துப்பாக்கியால் சுட்டும் தீவைத்து அழித்துக் கொண்டே வந்தது. திப்புவின் மீது மூன்றாவது காயம் ஏற்பட்டது. அவரது நெஞ்சின் இடதுபுறம் குண்டுகள் துளைத்தன. உடனிருந்தவர்கள் திப்புவை தூக்கிச் செல்ல முயன்றனர். முடியவில்லை.
திப்புவின் குதிரையும் கொல்லப்பட்டது. எங்கும் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள், கூக்குரல்கள். கீழே விழுந்து கிடந்த திப்பு சுல்தானின் இடுப்பில் ஒரு அழகிய விலையுயர்ந்த தங்கப்பட்டை. அதில் உடைவாள் சொருகப்பட்டிருந்தது. மினு மினுக்கும் தங்க கச்சையைக் கண்டதும் கும்பினி சிப்பாய் ஒருவன் திப்புவின் இடுப்பில் இருந்து எடுக்க எத்தனித்தான்.
இடது மார்பில் ஒரு குண்டும் மற்றொரு குண்டு நெற்றிப் பொட்டிலும் மூன்றாவது குண்டு வலது காதுக்கு மேலாகப்பாய்ந்து தாடை வரை சென்று தைத்து விழுந்து கிடந்த நிலையிலும் தசை இடுப்புக் கச்சையை எடுக்க குனிந்த ஆங்கிலேய சிப்பாயை தன்னந்தனியாக, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தன் வீர வாளுக்கு இரையாக்கியவர் தீரன் திப்பு. அப்போது வீரனின் துப்பாக்கி திப்பு மீது குண்டுகளைப் பொழிந்தது. இப்போதும் திப்பு இன்னொரு பிரிட்டீஷ் வீரனை தாக்கிச் சாய்த்தார்.
ஆங்கிலேயப் படைகள் அரண்மனைக்குள் புகுந்தன. சல்லடை போட்டுத் தேடின. திப்பு சுல்தானின் உடலைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. போரின் போது காயம்பட்ட திப்பு சுல்தான் கோட்டையின் வடக்கு வாசல் அருகே வீழ்ந்து கிடப்பதை அங்கிருந்து வந்த படைத்தலைவர் சொன்னான்.
மேஜர் பெயர்டு மற்றும் சில சதிகாரர்கள் திப்பு வீழ்ந்து கிடந்த இடத்திற்கு விரைந்தனர். திப்புவின் பல்லக்கு கண்டுபிடிக்கப்பட்டது. மெய்க்காப்பாளர் ராஜாகான் மரணத் தருவாயில் போராடிக் கொண்டிருந்தார்.
மேஜர் பெயர்டுக்கு, ராஜாகான் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரத்தழும்புகளுடன் வீழ்ந்து கிடந்த இடத்தை அடையாளம் காட்டினார்.
சிறந்த வெள்ளை நிறத்தில் ஆன மேற்சட்டை, பூ வண்ணம் கொண்ட தொள தொளவென்ற கால் சட்டை, இடையில் பட்டினாலும் பருத்தியினாலும் ஆன துணியைக் கட்டியிருந்தார் திப்பு. இடுப்பில் பச்சை நிற பெல்ட் அதில் சிவப்பு நிற பை. காயம்பட்டு வீழ்ந்ததால் தலைப்பாகை தலையில் இல்லை. தோளில் ஆபரணம் போன்ற பட்டை அணிந்திருந்தார். கம்பீரமான தோற்றத்தில் அசாதாரணமான வீரராகத் திகழ்ந்தார். (செ. திவான், வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள், பக்கம் 104)
கண் கண்ட சாட்சியான மேஜர் ஆலன், இப்போரில் தான் கண்ட காட்சியை தனது நூலில் எழுதினார்.
வாசல் கதவின் வழியாக திப்பு சுல்தானின் உடல் கொண்டு வரப்பட்டபோது அவரது கண்கள் திறந்திருந்தன. அவரது உடல் இளஞ் சூடாக இருந்தது. அப்போது நானும் திரு. வெல்லெஸ்லியும் திப்பு உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியாமல் இருந்தோம்.
அவரது நாடித் துடிப்பையும் இதயத் துடிப்பையும் அறிந்த பின்புதான் இந்த சந்தேகம் எங்களை விட்டு அகன்றது. அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்டோம்.
4.5.1799 இரவு ஸ்ரீரங்கப்பட்டிண நகரில் அத்தனை வீடுகளும் ஆங்கிலேயத் துருப்புகளால் கொள்ளையடிக்கப்பட்டன.
அந்த இரவில் எல்லாமே நடந்தது என்கிறான் ஆர்தர் வெல்லெஸ்ஸி. முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள், வீடுகள் சூறையாடப்பட்டு கொள்ளையிடப்பட்டன.பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாயினர். சயித் சாகிப், கமர் உத்தீன்கான் குடும்பப் பெண்கள் மிகவும் அவலத்திற்கு ஆளாயினர்.
கும்பினிப் படைகளிடம் அளவுக்கு அதிகமான கொள்ளைப் பொருட்கள் இருந்தன. தங்கம், வெள்ளி கட்டிக் கட்டியாக அவர்களிடம் இருந்தது. ஒரு நகைச் சிமிழ் மட்டும் 4,50,000 மதிப்புள்ளது. (அக்கால மதிப்புப்படி) திப்பு புஜத்தில் சுற்றி அணியும் வைரங்கள் பூட்டிய காப்பு ஒன்றை சிப்பாய் ஒருவன் 1500 பவுண்டுகளுக்கு விற்றான். அதை வாங்கிய கும்பினி மருத்துவர் அதனை 2000 பவுண்டுகளுக்கு விற்றõர்.
6.05.1799 ஸ்ரீரங்கப்பட்டிணம் வெல்லெஸ்லியின் பொறுப்பிற்கு அதிகாரப் பூர்வமாக வரும் வரை அங்கு கொள்ளைகளும் கொலைகளும் தொடர்ந்தன.
கொள்ளையோ கொள்ளை திப்பு சுல்தானிடமிருந்தும் ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்தும் ஆங்கிலேயர் அன்று அடித்த கொள்ளை மூன்று கோடி. (அப்போதைய மதிப்பு) ஜெனரல் ஹாரிசிற்கு 21,43,530 ரூபாய் கிடைத்தது, மீர் ஆலத்திற்கு ஒரு லட்சம் வராகன் கிடைத்தது.
4.05.1799 அன்று இரவெல்லாம் கொள்ளை, கொலை, குலைநடுக்கம், குழப்பம் நீடித்தது. கோரம் நிறைந்தது. அன்றிரவு இன்று நடந்ததுபோல் என்றுமே எங்குமே கொடுமை நடந்தது கிடையாது என்று வெல்லெஸ்லியே ஒப்புக் கொள்கிறார். (தீரன் திப்பு சுல்தான், பக்கம் 247)
மே திங்களின் 4ம் நாள் பகலும் இரவும் மட்டும் இறந்துவிட்ட திப்புவின் வீரர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்திற்கும் மேலிருக்கும். இறந்து கிடந்த உடல்களில் பெண்களின் உடல்களும், பச்சிளம் குழந்தைகளின் உடல்களும் பல ஆயிரம் இருந்தன. (சுஜாவுதீன் சர்க்கார், திப்புவின் அரசியல், பக்கம் 262)
1799 மே 4 இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். ஊரெங்கிலும் 12,000 மனித உடல்கள் மண்டிக் கிடைந்தன. அவற்றை அடக்கம் செய்வதே பெரும் பிரயத்திமையாயிற்று. (மாவீரன் திப்பு சுல்தான், ஜி. ஆளவந்தார், பக்கம் 200)
05.05.1799 திப்பு சுல்தானின் இறுதி நிகழ்வு முழு இராணுவ மரியாதையுடன் நடந்தது. சந்தூக்கை அந்தரங்கச் சேவகர்கள் நால்வர் தூக்கிச் செல்ல, ஐரோப்பிய படைகள் அணிவகுத்துச் செல்ல ஊர்வலம் நடந்தது.
திப்பு சுல்தானின் இரண்டாவது மகன் அப்துல் காலிக் குதிரை மீது ஏறி பின்னால் சென்றான். தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்.
கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கஞ்சத்தில் உள்ள கும்பாள் என்ற லால்பாக்கிற்கு தீரனின் உடல் கொண்டு வரப்பட்டது.
வழியில் ஏழை எளியவர்களுக்கு 5,000 ரூபாய் தானமாக வழங்கப்பட்டது.
மண் அழுதது, வான் அழுதது, மழை ஓவொன்று கொட்டியது. இடி, மின்னல் பலமாக ஒலித்தது, ஒளித்தது.
மின்னலின் கோரம் காவிரியின் வடகரையில் இருந்த பிரிட்டீஷாரின் பம்பாய் சேனையின் பாசறை மீது பாய்ந்தது. கூடாரங்கள் எரிந்தன. லெப்டினென்ட் பார்க்ளே, லெப்டினன்ட் கிராண்ட்  என்ற இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் பலியாயினர்.
மற்றும் சிலரும் முகாமில் இடி மின்னல் தாக்குதலால் இறந்து போயினர் என்று வில்க்ஸ் தனது நூலில் பக்கம் 751ல் தெரிவித்துள்ளார்.
தீரன் திப்பு சுல்தானின் உடல் அடக்கம் ஆகும் வேளையிலும் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
நாட்டின் விடுதலைக்காக திப்பு தன் உயிரைத் தியாகம் செய்தார். பேராசை கொண்ட பிரித்தானியருக்கு எதிராகப் போரிட்டார். திப்பு உயிர் வீழ்ந்தபோது “இனி இந்தியா எமதே” என்று வெள்ளையர்கள் எக்காளமிட்டனர்.
மைசூர் போரில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் பிரிட்டீஷாரால் பாராட்டப்பட்டனர். பிரிட்டீஷ் பாராளுமன்றம் வெல்லெஸ்லிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி நான்கு வகையாக பிரிக்கப்பட்டது. மைசூர் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை மைசூர்
அரசõக விட்டுவிட்டு, ஸ்ரீரங்கப்பட்டிணம் உள்ளிட்ட மீதிப்பகுதியை பிரிட்டீஷார் தாங்களே வைத்துக் கொண்டனர்.
குர்ரம், கொண்டா, கூட்டி, சித்தன துர்க்கம் முதல் கோலார் வரை உள்ள பகுதிகள் நிஜாமின் பங்காகச் சென்றது. குர்ரம் குண்டா கமருதீன் கானுக்கு கொடுக்கப்பட்டது.
இவன் கும்பினிப் படையை பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு வரும் தபால் தொடர்புகளைத் துண்டிக்கவும், பண்டக உதவி வருவதை தடுத்தி நிறுத்திடவும் வேண்டியவன். தீரன் திப்புவின் குதிரைப்படையின் பெரும் பகுதி இவன் பொறுப்பில்தான் இருந்தது. இந்த துரோகியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பறங்கியருக்கு பக்கபலமாக இருந்து படுபாதகம் புரிந்தான் அந்தத் துரோகி. மைசூரின் புதிய அரசின் திவானாக பூர்ணய்யா நியமிக்கப்பட்டார்.
துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை
‘இரு நூறு ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பரிசுத்தப் பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான்.
வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து உளமார்ந்த திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சிம்மாசனத்தில் அமர வேண்டுமெனச் சபதமெடுத்து மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தானின் இறுதி நாளைக் கொஞ்சம் சொன்னேன். இதயத்தில் கொஞ்சம் நீங்களும் நினைத்துப் போற்றுங்களேன்.

(மே 2015 இதழில் வெளியான கட்டுரை)

source : http://www.puthiyavidial.com/
 

அச்சத்தின் உச்சத்தில் இஸ்ரேல்

ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு பிரதேசத்தில் இத்தகைய ஒரு பெயர் இருப்பதில் எத்தகைய ஆச்சர்யமும் இல்லை. செப்டம்பர் 22, காலை 7.45 மணியளவில் அத்தெருவில் சென்ற 18 வயதான ஹதீல் ஹஷ்லமூன் தானும் அன்றைய தினம் ஷூஹதாகளின் பட்டியலில் இடம்பெறுவோம் என்பதை அறிந்திருந்தாரா என்பதை நாம் அறியவில்லை.
ஹெப்ரான் நகரின் ஃபலஸ்தீனியர்கள் தினமும் அத்தெருவில் உள்ள இஸ்ரேலிய சோதனை சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். ஹெப்ரானின் ஒரு பகுதி ஃபலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் ஃபலஸ்தீனியர்களுக்கு இப்படியொரு சோதனை. பள்ளி, வேலை, மருத்துவம் என எதற்கும் சோதனை சாவடிகளை கடந்துதான் செல்ல வேண்டும். பல நாட்கள் பல மணிநேரங்களை இந்த சோதனை சாவடிகளில் ஃபலஸ்தீனியர்கள் செலவழிக்க வேண்டும். அத்துடன் இஸ்ரேலிய படையினரின் மிரட்டல்களையும் ஏச்சுபேச்சுகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
அன்றைய தினமும் ஹதீல் வழக்கம்போல்தான் சென்றார். உடலை முழுமையாக மறைத்திருந்த ஹதீல் தனது முகத்தையும் மறைத்திருந்தார். சோதனை சாவடியில் நின்றிருந்த இஸ்ரேலிய படையினர் ஹதீலை முகத்திரையை விலக்குமாறு கூறினர். அவரின் கைப்பையையும் சோதனை செய்ய முற்பட்டனர். தனது கைப்பையை ஹதீல் கொடுத்த போதும் இஸ்ரேலிய படையினர் அவர் மீது வசைமாறி பொழிந்தனர். அவர்கள் ஹீப்ரு மொழியில் பேசினர். மொழி அறியாத ஹதீல் கலக்கமுற்றார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு ஃபலஸ்தீனியரான ஃபவாத் அபூ ஈஸா என்பவர், நிலைமையை உணர்ந்து ஹதீலுக்கு உதவ முற்பட்டார். ஆனால் அவரை தள்ளிய இஸ்ரேலிய படையினர் திடீரென்று; ஹதீலை தங்கள் தோட்டாக்களால் துவம்சம் செய்தனர். பத்து முறை இஸ்ரேலியர்கள் சுட்டதில் ஹதீலின் நெஞ்சு பகுதி, வயிறு, கால் என தோட்டாகள் அவரை துளைத்தன. இதன் பின்னர் நடந்தது இதைவிட கொடூரமானது. ஹதீலுக்கு உதவ முற்பட்ட மருத்துவர்களை இஸ்ரேலிய படையினர் தடுத்து நிறுத்தினர். வீதியிலேயே முப்பது நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் ஹதீல். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன்னுடைய வழக்கமான பொய் பிரச்சாரத்தை ஆரம்பித்தது இஸ்ரேல். ஹதீல் கையில் கத்தியுடன் இருந்ததாகவும் இஸ்ரேலிய படையினரை தாக்க முற்பட்டதாகவும் அதனால்தான் தாங்கள் தற்காப்பிற்காக சுட்டனர் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் இந்த பொய்கள் எல்லாம் எட்டு நிமிடங்கள் கூட தாங்காது. இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு எதிரான இளைஞர்கள் (Youth Against Settlements) என்ற அமைப்பினர் வெளியிட்ட புகைப்படங்கள் இஸ்ரேலியர்களின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டின.
இஸ்ரேலிய படையினரை தாக்குவதற்கு ஹதீல் எவ்வித முயற்சிகளையும் செய்யவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஹதீலின் கைப்பையில் புத்தகங்கள்தான் இருந்தன என்று சிலர் தெரிவித்தனர். ஹதீலுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே இரும்பு தடுப்புகள் இருக்கும் போது அவர் எப்படி இராணுவத்தினரை தாக்க வந்தார்? பத்து முறை துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் என்ன? காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதை ஏன் தடுக்க வேண்டும்? எந்த கேள்விக்கும் இஸ்ரேலிடம் பதில் இல்லை.
ஹதீல் மீதான தாக்குதல் அப்பட்டமான படுகொலை என்று அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சோதனை சாவடியில் உள்ள கேமரா பதிவுகளை இஸ்ரேல் ஏன் வெளியிடவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜெரூஸலம் நகரத்தின் மேயர் நிர் பர்காத், கற்களை எறியும் ஃபலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையினருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுலகிற்கு இஸ்ரேல் ஒரு ஜாம்பவானாக காட்சி அளித்தாலும் உண்மையில் அங்குள்ள பெரும்பான்மையினர், குறிப்பாக இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அதிக மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரதமர் நேதன்யாகுவிற்கு சோதனை நடத்தப்பட்டால் அவரும் நிச்சயம் இவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஃபலஸ்தீனியர்களின் இடைவிடாத போராட்டம் இஸ்ரேலியர்களை நிலைகுலைய வைக்கிறது. வெறும் கற்களை வைத்திருக்கும் ஃபலஸ்தீன சிறுவனை கண்டு கவச உடைகளை அணிந்து நவீன ஆயுதங்களை தரித்து நிற்கும் இஸ்ரேலிய இராணுவத்தினர் பயந்து ஓடும் காட்சிகளை கண்டு உலகமே அதிசயக்கிறது, இஸ்ரேலியர்களை எள்ளி நகையாடுகிறது.
விரக்தியின் விளிம்பிற்கு சென்றுள்ள இஸ்ரேலியர்கள் ஃபலஸ்தீனியர்கள் மீது அடக்குமுறைகளை வீசுகின்றனர். சோதனை சாவடிகளில் ஃபலஸ்தீனியர்களை காக்க வைப்பது, சிறுவர்கள் மீது நாய்களை ஏவுவது, ஹதீல் போன்றவர்களை படுகொலை செய்வது, அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறுவது எல்லாம் இந்த விரக்தியின் வெளிப்பாடுதான். அச்சத்தின் பிடியில் நிற்கும் இஸ்ரேலியர்களை எல்லாமே பயமுறுத்துகின்றன.
சமீபத்தில் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேலியர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வரும் யூதர்கள் அல் அக்ஸாவை சேதப்படுத்துகின்றனர். அதன் புனிதத்தை கெடுக்கின்றனர். எதிர்த்து வரும் ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் கடுமையாக தாக்குகின்றனர். பள்ளிவாசல் வளாகத்தில் முஸ்லிம் ஆண்களுக்கான அனுமதியை பெரும்பாலும் மறுப்பதால், பெண்களே போராட்டங்;களை நடத்துகின்றனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர், செப்டம்பர் 2000ல், அல் அக்ஸா வளாகத்தில் அத்துமீறி நுழைந்தான் அப்போதைய எதிர்கட்சி தலைவன் ஏரியல் ஷரோன். இந்த அத்துமீறல் இரண்டாவது இன்திஃபாதா எனும் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. இஸ்ரேலின் தொடர் தோல்விகளுக்கு இந்த இன்திஃபாதா அடித்தளமிட்டது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேற்றம், தேர்தலில் ஹமாஸ் வெற்றி, கிலாத் ஷாலித் சிறைபிடிப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் விடுதலை, ஏழு வருடங்களில் மூன்று பெரும் தாக்குதல்களை சந்தித்த போதும் தளராமல் நிற்கும் ஃபலஸ்தீனியர்கள், அதிகரித்து வரும் சர்வதேச நெருக்குதல்கள் என இஸ்ரேலுக்கு அடிமேல் அடி.
தற்போதும் தனது அத்துமீறல்கள் மூலம் தனது தோல்விகளுக்கான வாசல்களை இஸ்ரேல் திறந்துள்ளது. பதினெட்டு வயது மங்கை ஹதீல் போன்று ஏராளமான ஷூஹதாகள் இப்போராட்டத்தில் உரங்களாக இருப்பார்கள். இஸ்ரேல் வீழ்ச்சியின் இறுதி அத்தியாயத்தை காண அனைவரும் தயாராக இருங்கள்.

Source : http://www.puthiyavidial.com/

Tuesday, February 7, 2012

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

மௌலவி அலி அக்பர் உமரி
அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா

இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.

கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:

1.கணவனுக்கு கட்டுப்படுதல்:

எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ஸாலிஹான பெண்என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)

2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)

3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)

4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:

நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ரகசியம் காத்தல்:

கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.

விருந்தோம்பல்:

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்துஎன்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையேஎன்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.

அப்போது அல்லாஹ் அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.

இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்:

ஒருமுறை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் தன் மனைவியுடன் மக்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வயதான பெண்மணி உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நான் உனக்கு பால் கொடுத்த தாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய மனைவியைப் பார்த்து இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தன் மனைவி என்று கூறவும் இவருக்கும் நான் பால் கொடுத்துள்ளேன். இருவரும் சகோதர சகோதரி முறையல்லவா? நீங்கள் எப்படி கணவன் மனைவியாக வாழலாம்? என்றார்கள். உடனே உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் மதீனா சென்று நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்தை கூறி மார்க்க தீர்ப்பு கேட்க, நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணம் செல்லாது, எனவே உறவை முறித்துக் கொள்ளுங்கள் என்று கூற, அவர் தன் மனைவியிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வுக்காக பிரிந்து விடுவோம் என்றார். அன்பாக, ஒற்றுமையாக அவர்கள் அல்லாஹ்வுக்காக தன் திருமண உறவை முறித்துக் கொண்டார்கள். (புஹாரி)

குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:

எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.

யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:69)

தர்மம் செய்தல்:

யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி)

உண்மை பேசுதல்:

உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.

மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:

சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:

கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை வளர்ப்பு:

குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Tuesday, December 13, 2011

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

Wednesday, December 7, 2011

எகிறியது டாலர், சரிகிறது ரூபாய் இறக்குமதிகளுக்கு விழுந்தது அடி

எகிறியது டாலர், சரிகிறது ரூபாய் இறக்குமதிகளுக்கு விழுந்தது அடி

உலகமயமாக்கலில் ஒரு நாட்டை சார்ந்துதான் மற்றொரு நாடு இருக்கிறது. இதனால்தான் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளா£ர வீழ்ச்சி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையும் ஐரோப்பிய யூனியனின் கடன் பிரச்னையும் உலகம் முழுவதும் மற்ற கரன்சிகளின் மதிப்பில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கரன்சி மார்க்கெட்டில் முதலீட்டாளர்கள் அனைவரும் லாபம் கருதி டாலர்களை வாங்கிக் குவிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு டாலருக்கு ஸி52.73 ஆகக் குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் ஸி58 வரை குறையும் என எச்எஸ்பிசி வங்கி எச்சரித்துள்ளது.
ரூபாயின் மதிப்பு குறைய இது மட்டும் காரணமல்ல. பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. உள்நாட்டு உற்பத்தியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பங்குச் சந்தையோ பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே போகிறது. கண்ணுக்கு தெரிந்து இந்திய பொருளாதாரத்தில் நல்ல விஷயங்கள் எதுவும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான லாபம் தரக் கூடிய டாலரில் முதலீடு செய்கின்றனர். இந்திய ரூபாயை கொடுத்து டாலர்களை அதிக அளவில் வாங்குவதால் டாலருக்கு கிராக்கி ஏற்படுகிறது. இதனால் டாலர் மதிப்பு அதிகரிக்கிறது. அதன்பிறகும் டாலர் வாங்குவது குறையாமல் தொடர்ந்தால், டாலரின் மதிப்பு ஏறிக் கொண்டே போகும். ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போகும். எப்போதெல்லாம் ரூபாய் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி களத்தில் குதிக்கும். தன்னிடம் இருக்கும் டாலர்களை விற்க ஆரம்பிக்கும். டாலர் புழக்கம் அதிகரிக்கும்போது, ரூபாய் மதிப்பு சரிவது நிற்கும¢. ஆனால் இந்தமுறை ரிசர்வ் வங்கி தலையிட்டும் ரூபாய் மதிப்பு சரிவது நிற்கவில்லை. அந்த அளவுக்கு டாலருக்கான தேவை அதிகரித்ததுதான் காரணம்.
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடுவது வழக்கம். வாங்கிய பங்குகள் அனைத்தையும் விற்று டாலராக மாற்றிக் கொள்ளும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் முதலீடு செய்யும். இதை எதிர்பார்த்து இந்திய முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பங்குகளை வாங்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனையை ஆரம்பித்து விட்டன. இந்த மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரே வாரத்தில் ஸி3,661 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்றுள்ளன. இதையெல்லாம் டாலர்களாக மாற்றும்போது, டாலருக்கு தேவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பங்குச் சந்தையின் செயல்பாடு எதிர்பார்த்த லாபத்தை தருமா என்ற சந்தேகத்தில் இந்திய நிறுவனங்களும¢ பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் பங்குகள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். அதனால்தான் பங்குச் சந்தையும் அடி வாங்கி வருகிறது.
இந்தியாவை பொருத்தவரை ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். அதிகம் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 70 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்த இறக்குமதிக்கு டாலரில்தான் பணம் செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கர சரிவை சந்தித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் நிறுவனங்களின் லாபம் பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் விலை உயர்வாலும் கடுமையான போட்டியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் மேலும் குறையும். உதாரணமாக ஸ்கோடா, வோக்ஸ்வாகன், ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் சொகுசு கார்களின் இன்ஜின் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, கார் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். ஆனால் போட்டி காரணமாக விலையை உயர்த்த முடியாது. இதனால் லாபம் அடிபடும். இறக்குமதிக்கு சமமாக கார் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். மாருதி, ஹுண்டாய், நிசான், ஃபோர்டு நிறுவனங்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஏனெனில் இவை அதிக அளவில் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகின்றன.

இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் மின்னுற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை அதிகம் பாதிக்கப்படும் அதே நேரத்தில், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் காட்டில் அடை மழைதான். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷத்தில் உள்ளன. டாலர்களில் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களைப் பொருத்தவரை இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் மிகப் பெரிய சந்தை. வருமானத்தில் பெரும்பகுதி டாலர்களில்தான் வருகிறது. எனவே ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷமாக உள்ளன. நிறுவனங்களின் லாபம் அதிகரித்து பங்கு விலை உயர வாய்ப்புள்ளதால், ஐ.டி. பங்குகளில் முதலீடும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் கொண்டாட்டம்

கேரளாவை பொருத்தவரை வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அந்த மாநில மக்களும், ஏற்றுமதியும்தான் வருமானமே. இந்த இரண்டுமே ரூபாய் மதிப்பு சரிவால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கேரள மாநிலத்தை சேர்ந்த 21 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மாதாமாதம் தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். ரூபாய் மதிப்பு சரிவால் அவர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு நறுமணப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், முந்திரி, நார்பொருட்களுக்கும் ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல விலை கிடைத்து வருகிறது.

மறுமை வாழ்வு – ஒரு தெளிவு - அப்துல் சமத்

ஆராய்ச்சி பகுத்தாய்வின் அடிப்படையில் கிடைக்கப்படும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுத்தாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமான ஒன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிக்கை கொள்ளும்படி போதித்தார்கள்.

மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொருளற்றதாகி விடும் எனும் அளவுக்கு இறைத்தூதர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வைப்பற்றி அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறை வெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து இறைத்தூதர்களும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையில் ஏராளமான நல்லறத் தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப் பழக்க வழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாருபட்டதோடல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியாளர்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது.

தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமை படுத்தியது எது? அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாக உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.

இதனால்தான், இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைத்தூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு, மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலை வணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்க ரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது.

மனிதன் தர்க்கவாதியாகி விடுகிறான்:

36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78.
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”" என்று.
36:79. ”
முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80. ”
பசமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81.
வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.

சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை.

45:24. அவர்கள்; ”நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; ”காலம்”" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை”" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:25.
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ”நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்”" என்பது தவிர வேறில்லை.

ஒரு நாள் வரும் அன்று உலகம் அனைத்தையும் இறைவன் அழித்துவிடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய நாளின் துவக்கமாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண் பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீமைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படுவர். மனிதனின் ஆத்மீகத் தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன் மறுமை வாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப்பின் வாழ்வு இல்லையென்றால் இறை நம்பிக்கை என்பது அர்த்தமற்றதாகிவிடும். அப்படியே ஒருவன் இறைவனை நம்பினாலும் நியாயமற்ற இறைவனைத்தான் நம்ப வேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல.

நிச்சயமாக இறைவன் நீதமிக்கவன். இவ்வுலகில் வரை முறையின்றி கொடுமை புரிந்தவர்கள், அப்பாவி உயிர்களை பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தமது மனோ இச்சைகேற்ப மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சயமாக தண்டிப்பான். மேலும் நியாயத் தீர்ப்பு நாள் வந்தே தீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.

இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்:

34:3. எனினும் நிராகரிப்பவர்கள்; ”(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது”" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பொியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹ{ல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:4.
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.


34:5.
மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.

இறைவனின் கருணையும் நீதியும் முழு அளவில் மறுமை நாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளை சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமை நாளைப் புறக்கணித்து மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். பாவிகளின் நிலைைைய குறித்து குர்ஆன் இப்படிக் கூறுகிறது.

28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?

மறுமை வாழ்க்கையை மறுப்பவர்கள் இறை நம்பிக்கையாளர்களையும் நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத் தருவாயில் தங்கள் தவறை உணர்ந்து தங்களுக்கு இவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது புலம்புவார்கள்.

மரணத் தருவாயில் கோரிக்கை நிராகரிக்கப்படும்:

23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!”" என்று கூறுவான்.
23:100. ”
நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக”" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
23:101.
எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
23:102.
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
23:103.
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
23:104. (
நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை காிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.

ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கையைப் புறக்கணித்தால் அங்கு அனைத்து பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும். இலஞ்ச ஊழல்கள் பெருகும். இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும்.

ஆத், ஸமூத், ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் அழிவு:

69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:5.
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6.
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:7.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
69:8.
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:9.
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
69:10.
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:11.
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
69:12.
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
69:13.
எனவே, _ாில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:14.
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:15.
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:16.
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
69:17.
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:18. (
மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
69:19.
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ”இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்”" எனக் கூறுவார்.
69:20. ”
நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”"
69:21.
ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கயைில் -
69:22.
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:23.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
69:24. ”
சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்”" (என அவர்களுக்குக் கூறப்படும்).
69:25.
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ”
அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ”(
நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ”
என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ”
என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”" (என்று அரற்றுவான்).
69:30. ”(
அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”"
69:31. ”
பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:32. ”
பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்”" (என்று உத்தரவிடப்படும்).
69:33. ”
நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”"
69:34. ”
அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை.”"
69:35. ”
எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”"
69:36. ”
சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”"
69:37. ”
குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”"

ஆகவே மறுமை நம்பிக்கை மனிதனுக்கு தீர்ப்பு நாளின் வெற்றியை மட்டும் அருளவில்லை. இவ்வுலகில் மனிதன் தனது பொருப்பை உணர்ந்து தனக்குரிய பணியினை செம்மையாக, முறையாக ஆக்ககரமாகச் செய்து உலக அமைதியும் இன்பமும் நிரம்பியதாக ஆக்கவும் இஸ்லாம் வழி காட்டுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!- அப்துல் சமத்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது.

கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!

கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது அவர் மீது கடமையாக இருப்பதால் அவர்களை தம்மோடு வைத்துப் பராமரிப்பதை கூட்டுக் குடும்பம் என்பதில் சேர்க்க இயலாது என்பதைக் கவனத்தில் கொண்டு இக்கட்டுரையைப் படிக்கவும்.

சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.

யார் அந்நிய ஆடவர்?

அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

மேலும், (முஃமினான பெண்கள்)

  • தம் கணவர்கள், அல்லது
  • தம் தந்தையர்கள், அல்லது
  • தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது
  • தம் புதல்வர்கள் அல்லது
  • தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது
  • தம் சகோதரர்கள் அல்லது
  • தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது
  • தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது
  • தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது
  • ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்)
  • பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்

ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும்,

முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

மேற்கூறப்பட்ட வசனத்தில் யார் யாருக்கு முன்னரெல்லாம் ஒரு பெண் தம் அழகலங்காரத்தை மறைக்கத் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாகவே கூறிவிட்டான். இவர்களைத் தவிர மற்றவர்கள் எவராயினும் அவர் ஒரு பெண்ணுக்கு அந்நியராவார்; அவர்களிடம் ஒரு பெண் தன் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.. இந்த அந்நியர்களிடமிருந்து ஒரு பெண் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைப்படி தம்மை மறைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.

கணவனின் சகோதரர்களும் அந்நியரே!

மேற்கூறப்பட்ட இறைவனின் கட்டளையில் பட்டியலிடப்பட்டவர்களில் கணவனின் சகோதரர்கள் இடம்பெறவில்லை! எனவே, ஒரு பெண்ணுக்கு கணவனின் சகோதரரும் அந்நியரே என்பதை விளங்கமுடிகிறது. கணவனின் சகோதரர்களுக்கு முன் ஒரு பெண் வருகின்ற போது ஒரு அந்நிய ஆடவர் முன் வரும் போது எவ்வாறு ஹிஜாப் அணிய வேண்டுமோ அவ்வாறே அணிவது அவசியமாகிறது.

ஆனால், இவ்விதியை இன்று பெரும்பாலான முஸ்லிம்கள், ஏன் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதாக கூறக்கூடியவர்கள் கூட பின்பற்றத் தவறிவிடுகின்றனர். ஒரே வீட்டில் சகோதரர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இந்த விஷயத்தில் மிக அலட்சியமாக இருக்கன்றனர். தனித்தனியாக வாழ்வோர்களில் சிலர் கூட இறைவனின் இச்சட்டத்தை (24:31) மீறுகின்றனர்.

இதை விட வெட்கக்கேடு என்னவென்றால் இன்று ஒவ்வொரு வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற சோதனையாகிய தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக அதில் வருகின்ற காட்சிகளான சினிமா, அசிங்கமான காட்சிகளடங்கிய பாடல்கள், சீரியல்கள் மற்றும் இன்னபிற ஆபாசக் காட்சிகளையும் தம் கணவனின் சகோதரர்களுடன் ஒன்றாக உட்கார்ந்துப் பார்க்கின்ற அவல நிலையையும் நம் முஸ்லிம் சகோதரர்களின் கூட்டுக் குடும்பங்களில் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. இது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் அவ்வாறு பலவித மோசமான விளைவுகள் இதற்கு முன்னால் பல ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் (உ.ம். புதுவை பர்வதிஷா நிகழ்ச்சி நாடறிந்த ஒன்று) நம் சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)

இன்று முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் மேற்கூறிய எச்சரிக்கையைப் பற்றிய போதிய தெளிவில்லாமல் நம் மக்களில் சிலர் தம் சகோதரரின் மனைவியோடு ஒன்றாக தனிமையில்பயணிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்; இன்னும் மோசமாக, சிலர் இரு சக்கர வாகனத்தில் கூட தம் சகோதரரின் மனைவியை ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்ற போது ஒருவர் உடல் மற்றொருவர் மீது படாமல் இருக்கமுடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும் அப்பெண்ணின் கணவனே அதற்கு சம்மதிப்பது மிகவும் வெட்கக்கேடானது..

சகோதரியின் கணவனும் அந்நியரே!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் ஊர்களில் பல வீடுகளில் திருமணமானப் பெண்கள் தம் தாயின் வீட்டிலேயே தான் இருப்பர். கணவர் தம் மனைவியின் வீட்டில் பெரும்பாலான நாட்களைக் கழிப்பது வழக்கம்; இன்னும் சிலர் தம் மனைவியின் வீட்டிலேயே கூட தங்கிவிடுவது உண்டு. அதுபோலவே அப்பெண்ணின் சகோதரிகளும் தம் கணவர்மார்களுடன் அவ்வீட்டிலேயே தங்குவதுண்டு. அந்த சமயங்களில் சில பெண்கள் தம் சகோதரியின் கணவர் தானே என்ற அதிக உரிமையில் அவர்களின் முன்னிலையில் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைகளைப் பேணாது அவர்களின் முன்னிலையில் வந்து சர்வ சாதாரணமாக பேசுவதைக் காணமுடிகின்றது. இது இஸ்லாத்தின் பார்வையில் குற்றத்திற்குரிய செயல் என்பதை ஏனோ நம் பெண்கள் உணர்வதில்லை! ஒரு பெண் தம் சகோதரியின் கணவர்களையும் அந்நியராகவே கருதி அவர்கள் முன்னிலையில் முறையான ஹிஜாபுடன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிறிய தாய், பெரிய தாய் மகன்களும் அந்நியரே!

சிறிய தாய், பெரிய தாயின் மகன்கள் ஒரு பெண்ணிற்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்ட அந்நிய ஆண்களாவார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு பெண் வருகின்ற போது முழுமையான ஹிஜாபை பேணியவர்களாகத் தான் வரவேண்டும். மாற்றுமதக் கலாச்சாரம் நம் மக்களிடையே மிக அதிக அளவில் ஊடுவியிருப்பதன் காரணமாக அவர்களை தம் சகோதரர்கள் போல நம்மில் பல பெண்கள் கருதி அவர்களுக்கு முன்னால் தம் சொந்த சகோதரன், தந்தை ஆகியோருக்கு முன்னால் எவ்வாறு வருவார்களோ அதுபோல் வருவது மற்றும் அவர்களுடன் சர்வசாதாரணமாக கைகுலுக்குவது, அரட்டையடிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர். நவ நாகரீகம் என்ற பெயரிலே கணவர்மார்களும் இதற்கு உடந்தையாயிருக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். இவர்களும் அந்நியர்களே என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னால் செல்லும் போதும் ஹிஜாப் பேணப்பட வேண்டும்.

இது போலவே சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியராவார் என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.

அத்தை மகன், மாமன் மகன்களும் அந்நியர்களே!

இவர்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியர் என்பதை கவனத்தில் கொண்டு இவர்களிடமும் ஒரு பெண் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தற்காலத்தில் நவனாரீக மங்கைகள் எனக் கூறிக்கொண்டு சிலர் இவர்களுடன் ஒன்றாக சுற்றுவது, ஒரே பைக்கில் பயணிப்பது, தனியாக ரெஸ்டாரெண்டுக்குச் செல்வது, இமெயில், சாட்டிங் போன்றவற்றின் மூலம் கிண்டலடித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்கின்றனர். இதுவும் தவறாகும். ஒரு பெண் அந்நிய ஆடவருடன் குழைந்து பேசுவதற்கு எவ்வாறு

தடுக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இவர்களடனும் அவ்வாறு பேசுவதற்கு தடை இருக்கின்றது என்பதை நம் பெண்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)

தவிர்க்கப்பட வேண்டியவைகள்:

இன்று ஃபாஷன் என்ற பெயரிலும், நவநாகரீகம் என்ற பெயரிலும் பலவாறான ஆடைகளை பெண்கள் உடுத்துகின்றனர். அவைகளில் சில பெண்களின் அந்தரங்க அழகுகளை அப்படியே வெளியில் காட்டக்கூடிய மெல்லிய வண்ண ஆடைகள், இறுக்கமான ஆடைகள் போன்றவையாகும். இது தவிர கழுத்து, வயிறு, தொப்புள், முதுகு ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியில் தெரியக்கூடிய சேலைக்கான மிக இறுக்கமான ஜாக்கெட், உடல் அழகுகளை அப்படிய காட்டக்கூடிய மிக இறுக்கமான மிடி, பாவாடை, ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவைகள். இவைகளை இன்று நம் சமுதாய பெண்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர்.

நம்மில் கூட்டுக் குடும்பமாக இருக்கின்ற பலரது வீட்டில் இத்தகைய ஆடையணிந்த பெண்கள், தங்களுக்கு அந்நிய ஆடவர்களான வீட்டிலுள்ள கணவனின் சகோதரர்கள், சகோதரியின் கணவன்மார்கள், சிறிய, பெரிய தாயின் மகன்கள், சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்கள், மாமன் மற்றும் அத்தை மகன்கள் ஆகியவர்கள் முன்பாக முறையான ஹிஜாப் இன்றி சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் டீ.வி. பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்வற்றில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு முரணானது என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற முறையான ஹிஜாப் இன்றி ஒரு பெண் அந்நியர்களான இவர்கள் முன்பு வெளி வரக்கூடாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பெண்களின் ஆடை எவ்வாறிருக்க வேண்டும்?

அடுத்ததாக பெண்கள் ஆடை விசயத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். குறிப்பாக அந்நிய ஆடவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இவ்விசயத்தில் மிக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இஸ்லாம் தடை செய்த ஆடை எது என்பதை அறிந்து அவற்றை தவிர்ந்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள், பிற்காலத்தில் வரக்கூடியவர்கள் எவ்வாறெல்லாம் அடையணிவார்கள் என்பதை மிக துல்லியமாக வர்ணித்துள்ளார்கள். அதை இன்று நடைமுறையில் சர்வசாதாரணமாக காணவும் முடிகின்றது.

ஆடை அணிந்தும் அணியாத பெண்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்::ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்கள்:

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்:அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

மற்றொரு நபிமொழியில்:

நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.” (அறிவிப்பவர் ; அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 3971)

இறைவன் கூறுகிறான் : -

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன் (அல் குஆன் 33:59)

இவ்விசயத்தில் இதுவரை நாம் தவறிழைத்திருப்போமாயின் இறைவனின் பின்வரும் கூற்றுபோல நாம் இதிலிருந்து விலகி, திருந்தி அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவோம்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை பிழைபொறுக்கத் தேடுவோரின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)