Monday, August 15, 2011

sāre jahān se acchā

सारे जहाँ से अच्छा हिन्दोस्तान हमारा
हम बुलबुले है इसकी ये गुलसिता हमारा ॥धृ॥

घुर्बत मे हो अगर हम रहता है दिल वतन मे
समझो वही हमे भी दिल है जहाँ हमारा ॥१॥

परबत वो सब से ऊंचा हमसाय आसमाँ का
वो संतरी हमारा वो पासबा हमारा ।२॥

गोदी मे खेलती है इसकी हजारो नदिया
गुलशन है जिनके दम से रश्क-ए-जना हमारा ।३॥

ए अब रौद गंगा वो दिन है याद तुझको
उतर तेरे किनारे जब कारवाँ हमारा ॥४॥

मझहब नही सिखाता आपस मे बैर रखना
हिन्दवी है हम वतन है हिन्दोस्तान हमारा ॥५॥

युनान-ओ-मिस्र-ओ-रोमा सब मिल गये जहाँ से
अब तक मगर है बांकी नामो-निशान हमारा ॥६॥

कुछ बात है की हस्ती मिटती नही हमारी
सदियो रहा है दुश्मन दौर-ए-जमान हमारा ॥७॥

इक़्बाल कोइ मेहरम अपना नही जहाँ मे
मालूम क्या किसी को दर्द-ए-निहा हमारा ॥८॥

Transliteration:
sāre jahān se acchā hindostān hamārā
ham bulbulain hai is ki, yeh gulsitān hamārā

ghurbat men hon agar ham, rahta hai dil vatan men
samjho vahīn hamen bhī, dil hain jahān hamārā

parbat voh sab se ūnchā, hamsāya āsmān ka
voh santari hamārā, voh pāsbān hamārā

godi men kheltī hain is ki hazāron nadiyā
gulshan hai jin ke dam se, rashk-e-janān hamārā

aye āb, raud, ganga, voh din hen yād tujhko
utarā tere kināre, jab kārvān hamārā

maz'hab nahīn sikhātā āpas men bayr rakhnā
hindvi hai ham, vatan hai hindostān hamārā

yūnān-o-misr-o-romā, sab miṭ gaye jahān se
ab tak magar hai bāqi, nām-o-nishān hamārā

kuch bāt hai keh hastī, miṭati nahīn hamārī
sadiyon rahā hai dushman, daur-e-zamān hamārā

iqbal ko'ī meharam, apnā nahīn jahān men
m'alūm kya kisī ko, dard-e-nihān hamārā

Translation
Better than the entire world, is our Hindustan;
we are its nightingales of mirth, and it is our garden abode

Though in foreign lands we may reside, with our homeland our hearts abide,
Regard us also to be there, where exist our hearts

That mountain most high, neighbor to the skies;
it is our sentinel; it is our protector

In the lap of whose, play thousands of rivers;
gardens they sustain; the envy-of-the-heavens of ours

O waters of the Ganga mighty, do you recall the day
when on your banks, did land the caravan of ours

Religion does not teach us to harbour grudges between us
Indians we all are; India, our motherland

While Greece, Egypt , Rome have all been wiped out
till now yet remains, this civilization of ours {it has stood the test of time}

Something there is that keeps us,our entity from being eroded
For ages has been our enemy, the way of the world

Iqbal! Is there no soul that could
understand the pain in thy heart?

"சாரே ஜஹான் சே அச்சா"

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற பிரிவினைகள் இல்லாமல் இருந்தது. அப்போது இந்தியா என்பதை விட, இந்துஸ்தான் என அழைக்கவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் விரும்பினர். இதில் ஒருவர் தான் முகமது இக்பால். அலாமா இக்பால் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்ட இவர், ஒரு உருது கவிஞர். இவர் உருது மொழியில் எழுதிய பிரபல பாடல் தான், சாரே ஜாஹன் சே அச்சா.

இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய இக்பாலின் இந்த கவிதை 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இட்டிஹத் என்ற வாரஇதழில் வெளியானது. பின்னர் அதுவே ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுக்க பயன்படும் முக்கிய கருவியாக மாறியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளும் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட முறையில் பாடி சுதந்திர தாகத்தை மக்களுக்கு புகட்டினர்.

கடந்த 1965ம் ஆண்டு, இந்த கவிதைக்கு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் இசை அமைத்து, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடினார். அதன்பின் மிகவும் பிரபலமடைந்த இப்பாடலின் மெட்டு, இந்திய முப்படைகளின் அணிவகுப்பின் போது வாசிக்கப்படும் முக்கிய இசை என்பது யாவரும் அறிந்ததே.

பாடலின் கருத்து:

இந்துஸ்தான் அல்லது இந்திய நாடு, உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளை விட சிறந்தது. அது நாம் வசிக்கும் தோட்டம், நாம் அதில் உள்ள நைட்டிங்கேல் பறவைகள். அந்நிய நாடுகளில் வசித்தாலும் நமது தாய்நாட்டின் நினைவு இதயத்தை வருட்டிக் கொண்டிருக்கும்.

உயர்ந்த, வானாளாவிய மலை தொடர்கள், அவை நமக்கு அரண்களாக மாறின. மனதை மயக்கும் ஆயிரக்கணக்கான ஆறுகள், அவை நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டன. நம் ஒவ்வொருவரிடையே ஏற்படும் பேதங்களை பொறுத்துக் கொள்ள மதங்கள் நமக்கு வழிகாட்டவில்லை.

இந்துஸ்தானில் வாழும் நாம் இந்தியர்கள், இந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

உலக சாம்ராஜ்ஜியங்களான கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகியவை அடையாளம் தெரியாமல் மாறி மறைந்தன.

ஆனால், நமது அடையாளங்கள் மட்டும் இன்றும் மாறவேயில்லை. அப்படியே நூற்றாண்டுகள் மாறினாலும், காலங்கள் கைவிட்டாலும் நமது வளர்ச்சி மறையாது என்று போகிறது இந்தப் பாடல்.

Sunday, August 14, 2011

இது தான் ஜனநாயக இந்தியாவோ?

இது தான் ஜனநாயக இந்தியாவோ?

முஸ்லிம்களுக்காக போராடியதை தவிர எந்த குற்றமும் செய்யாத மதானி

கர்நாடக சிறையில் உடல்நல குறைவால் அவதிப்படும் அப்துல் நாசர் மதானி

கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கடந்த 2010-௦ ஆகஸ்டில் கர்நாடக போலிசாரால் கைது செய்யப்பட்டார்.கடந்த பலவருடங்களாக கோவை சிறையில் இருந்த அவர் நிரபராதி என கூறி விடுதலை செய்யப்பட்ட சில மாதங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டது முஸ்லிம் சமுகத்தை பெரும் துயரில் ஆழ்த்தியது.
பெங்களூரில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதானி கர்நாடகாவில் உள்ள அகர்கர மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த குண்டு வெடிப்பு பற்றி ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா வெளியிட்டுள்ள செய்தியில் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் போலிசாரால் திட்டமிட்டு சாட்சிகள் ஜோடிக்கபட்டதகவும் கூறியது.இந்தநிலையில் கர்நாடக பாஜக அரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மதானி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்​து அவர் வழக்கில் வேண்டுமென்றே சேர்கப்பட்டதாகவும்,உடல்நலத்தை கருத்தில் கொண்டு மதானியை விடுதலை செய்யவேண்டும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்?தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் மதானிக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து தீர்பளித்தது.இதன்படி கடந்த ஜூன் -7 அன்று தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். 28 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று (5 .7 .2011 )மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.மதானியை பரிசோதித்த டாக்டர்கள் கூறும்போது,பல்வேறு நோய்களால் பாதிக்கப்படிருப்பதகவும்,மூன்று​ வாரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்றும் தெரிவித்தனர்.மதானி கண் பார்வை கோளறு,நீரிழிவு நோய்,இரத்தகொதிப்பு,ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதுபோல்,ம​தானி மீது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசினர் இதில் தனது ஒரு காலை இழந்தார்.தற்போது செயற்கை காலை பயன்படுத்தி வருகிறார்.தொடர்ந்து பலவருடங்களாக செயற்கைகாலை பயன்படுத்தி வருவதால் காலில் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.இதன் பக்க விளைவாக முதுகு வலியாலும் கஷ்டப்பட்டுவருகிறார்.முஸ்லிம்க​ளுக்காக போராடியதை தவிர எந்த குற்றமும் செய்யாத மதானி சிறையில் வாடி வருவது பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.கேரளாவில் செல்வாக்குடன் கூட்டணி ஆட்சி நடத்தும் முஸ்லீம் லீக் கட்சி மதானி சிறையில் இருப்பதையே விரும்புவது போல் நடந்து வருகிறது.


இதில் வேடிக்கை என்னவெனில் ஆயிரக்கணக்கான மக்களைகொலை செய்த அத்வானி, நரேந்திரமோடிகலேல்லாம்,சுதந்திர​மாக உலா வந்து கொண்டிருக்கும் பொது எந்த குற்றமும் செய்யாத மதானி போன்றவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.இது தான் ஜனநாயக இந்தியாவோ?

நன்றி ;_தாஃவா இஸ்லாம்_,_._,_

வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்

வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்



இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.



'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் - வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.

2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

மன்னர் பகதூர்ஷா

அதே வேளையில் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.

முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. . முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி என்னும் பெயருடைய மாவீரர் போற்றப்பட்டிருக்க வேண்டியவாராவார்

உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.

வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.

உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் தனது நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஷா வலியுல்லாஹ் (1703-1762)

ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

திப்பு சுல்தானின் தியாக பூமி

வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்

1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.

ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786-1831)

ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.

இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.

முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.

பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.

1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

Friday, August 12, 2011

மாவீரன் திப்பு

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.

தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".

Tuesday, August 9, 2011

தாய் தந்தையருக்கு துவா செய்தவர்களாக இருப்போம்

அஸ்ஸலாமுஅலைக்கும் அன்பான சகோதரர்களே சகோதரிகளே நாம் இனி வரும் நாட்களில் நாம் தாய் தந்தையருக்கு துவா செய்தவர்களாக இருப்போம் இன்ஷாஅல்லாஹ்
17:24 وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) சார்பாக சென்னை மண்ணடியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து நேற்று (திங்கட்கிழமை) 3:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனதா கட்சியின் தலைவரும் ஃபாஸிச சிந்தனை கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமி டி.என்.ஏ என்ற பத்திரிக்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கருவருப்பது எப்படி? என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தார். தீவிரவாதத்தை ஒழிக்க என்ன வழி? என்று தலைப்பிட்டு விட்டு அதில் முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், இந்தியாவில் உள்ள 300 மஸ்ஜிதுகளை இடிக்க வேண்டும் அதில் முதலாவதாக காசியிலுள்ள மஸ்ஜிதை இடிக்க வேண்டும் என்றும் விஷமத்தனமான‌ கருத்துக்களை எழுதியுள்ளார். இதனை கண்டித்து தேசிய சிறுபான்மை கழகம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னை மண்ணடியில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐயின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐயின் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் ரத்தினம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை வாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் ஹுஸைன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இறுதியாக திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஹஸன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். திறளான மக்கள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.