Saturday, July 30, 2011

நெருங்கி விட்டது ரமளான் மாதம்

ஆண்டான் - அடிமை, தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.



பெண் சிசுவை உயிருடன் புதைத்து, பெண் இனத்திற்கு ஆன்மா உண்டா ? என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.



நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.



நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.



கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.



பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.



நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.



அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.



அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து கொள்வோம் வாருங்கள்.

No comments:

Post a Comment